Samsung Galaxy Tab S6 இன்டிஸ்ப்லே ஸ்க்ரீன் உடன் அறிமுகம்.

Samsung  Galaxy Tab S6 இன்டிஸ்ப்லே  ஸ்க்ரீன்  உடன் அறிமுகம்.
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனத்தின் Galaxy Tab S6 10.5 இன்ச் சூப்பர் AMOLED WQXGA ஸ்கிரீன், உடன் அறிமுகம் செய்யப்பட்டது

சாம்சங் நிறுவனத்தின் Galaxy Tab S6  10.5 இன்ச் சூப்பர் AMOLED WQXGA ஸ்கிரீன், உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதனுடன் இதில்  ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கிறது.

விலை மற்றும் விற்பனை 
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 மவுண்டெயின் கிரே, கிளவுட் புளு மற்றும் ரோஸ் பிளஷ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்ட வைபை மாடல் விலை 699 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 53,465) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. ஸ்டோரேஜ் வைபை மாடல் விலை 779 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 59,560) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜ் LTE மற்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 859 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 65,700) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Samsung  Galaxy Tab S6 சிறப்பம்சங்கள்:

– 10.5 இன்ச் 2560×1600 பிக்சல் WQXGA சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஒன் யு.ஐ. 1.5
– 13 எம்.பி. பிரைமரி கேமரா
– 5 எம்.பி. 123-டிகிரி அல்ட்ரா-வைடு கேமரா
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா
– ஆப்டிக்கல் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– அக்செல்லோமீட்டர், கைரோ சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார்
– ஹால் சென்சார், ஆர்.ஜி.பி. லைட் சென்சார்
– ஏ.கே.ஜி. டியூன் செய்யப்பட்ட 4 ஸ்பீக்கர்கள்
– ப்ளூடூத் வசதியுடன் எஸ் பென், 0.35 Mah  பேட்டரி
– 4ஜி LTE, வைபை, வைபை டைரக்ட், ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி, போகோ பின்
– 7,040 Mah . பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் குவாட்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஏ.கே.ஜி. ஹார்மன் மூலம் டியூன் செய்யப்பட்டுள்ளது. புதிய சாதனத்தில் ஐரிஸ் ஸ்கேனர் நீக்கப்பட்டு இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. 123-டிகிரி அல்ட்ரா-வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட எஸ் பென் சாதனத்துடன் வரும் புதிய டேப்லெட் ரிமோட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளை கொண்டிருக்கிறது. எஸ் பென் சாதனத்தில் எஸ் பென் ஏர் ஆக்‌ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்க எஸ் பென் பயன்படுத்தலாம். எஸ் பென் சாதனத்தில் 0.35 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo