Samsung Galaxy M40 இன்பினிட்டி O டிஸ்பிளே உடன் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Samsung Galaxy M40 இன்பினிட்டி  O டிஸ்பிளே  உடன் இன்று பகல் 12 மணிக்கு  விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி M40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து  ஆகிய இன்று  பகல் 12 மணிக்கு  அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இதன்  6GB ரேம் மட்டும் 128 GB ஸ்டோரேஜ் உடன் இன்று அதன் விற்பனையை ஆரம்பிக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD .பிளஸ் இன்ஃபினிட்டி-OLCD  ஸ்கிரீன், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M40 சிறப்பம்சங்கள்

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ எல்.சி.டி. டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
– அட்ரினோ 612 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 32 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
– 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
– 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ
– டால்பி அட்மாஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3500Mah  பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் ஒன் யு.ஐ. சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் கிரேடியண்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி எம்40 மாடலில் கைரேகை சென்சாரும் பின்புறமாகவே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், 3500 Mah . பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்பட்டு யு.எஸ்.பி. டைப்-சி இயர்போன்கள் வழங்கப்படுகிறது.

விலை மற்றும் ஆபர் .
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு மற்றும் சீவாட்டர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை ஜூன் 18 ஆம் தேதிஆன  இன்று  முதல் விற்பனை அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது.

அறிமுக சலுகைகள்:

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.249 மற்றும் ரூ.349 சலுகைகளில் பத்து மாதங்களுக்கு 100 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo