விரைவில் இந்திய இந்தியா வரும் சாம்சங்-Galaxy Note 10 Lite விரைவில் அறிமுகம் ஆகும் இதன் சிறப்பு என்ன

விரைவில் இந்திய இந்தியா  வரும் சாம்சங்-Galaxy Note 10 Lite  விரைவில் அறிமுகம் ஆகும் இதன்  சிறப்பு என்ன

சாம்சங் கேலக்ஸி S 10E  ஸ்மார்ட்போனை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தற்சமயம் குறைந்த விலையில் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் SM-N770F என்ற பெயரில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய விலை குறைந்த கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 10இ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.

விலை குறைந்த ஸ்மார்ட்போன் என்பதால் இதன் ஹார்டுவேர் அம்சங்களில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் கேமராவும் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் மாடலில் உள்ளதை விட சிறிய பேட்டரி, குறைந்த மெமரி மற்றும் ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.

தற்சமயம் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 69,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. என இரு மாடல்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறேயே ரூ. 79,999 மற்றும் ரூ. 89,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo