Samsung Galaxy Note 10 இன்டர்நெட் லீக் ரென்டர்ஸ்

Samsung Galaxy Note 10 இன்டர்நெட் லீக்  ரென்டர்ஸ்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 10 ரென்டர்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இம்முறை ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ ரென்டர்கள் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பது தெளிவாகி இருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனை பார்க்க ஹூவாய் பி30 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் உருவாகி வருவதும் உறுதியாகியிருக்கிறது.

இத்துடன் பன்ச் ஹோல் செல்ஃபி கேமராவும் காணப்படுகிறது. இதனுடன் வழங்கப்படும் எஸ் பென் இம்முறை வட்ட வடிவம் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரென்டர்களிலும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் காணப்படாத நிலையில், ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் பிக்ஸ்பி மற்றும் பவர் பட்டன்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நான்கு பெரிய கேமராக்கள், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

முன்புறம் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போனின் மேல்புறம் மற்றும் கீழ்புறங்களில் மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile