இன்டர்நெட்டில் லீக் ஆனது வித்தியசமான டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி A8S

HIGHLIGHTS

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A8S ஸ்மார்ட்போனின் விவரங்கள் அமெரிக்காவின் (FCC) வெப்சைட்டில் லீக் ஆகியுள்ளது.

இன்டர்நெட்டில் லீக் ஆனது  வித்தியசமான டிஸ்பிளே  உடன் சாம்சங் கேலக்ஸி A8S

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A8S ஸ்மார்ட்போனின் விவரங்கள் அமெரிக்காவின்  (FCC) வெப்சைட்டில் லீக் ஆகியுள்ளது. இதில் கிடைத்திருக்கும் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 19:5:9 ரக டிஸ்ப்ளே மற்றும் போனின் இடது புற ஒரமாக டிஸ்ப்ளேவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அமெரிக்க வெப்சைட்டில் SM-G8870 ன்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது சாம்சங் ஸ்மார்ட்போனில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (5V-2A/9V-1.67A) வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இதே போன்ற வசதி சாம்சங் நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி A8S எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, LED. ஃபிளாஷ், f/1.7
– 10 எம்.பி. 120° அல்ட்ரா வைடு பிரைமரி லென்ஸ்
– 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, என்.எஃப்.சி
– 3400 Mah . பேட்டரி
– அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A8S ஸ்மார்ட்போனினை இம்மாதம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் வரும் வாரங்களில் தெரியவரும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo