ஆவலுடன் எதிர் பார்த்து காத்து கொண்டிருந்த Samsung Galaxy A80 இந்தியாவில் அறிமுகம்.

ஆவலுடன் எதிர்  பார்த்து  காத்து கொண்டிருந்த  Samsung Galaxy A80 இந்தியாவில் அறிமுகம்.
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஸ்லைட் அவுட் கேமரா சாம்சங்கின் H -to -H டிஸ்பிளே போன்றவை இதில் வழங்குகிறது.இதனுடன் இதில் முழு டிஸ்பிளே அதாவது பேசில் இல்லாத டிஸ்பிலேவை வழங்கப்பட்டுள்ளது

இதன் ரெஸலுசன் 1080x2400 பிக்சல் இருக்கிறது.இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 20:1 இருக்கிறது

சாம்சங் நிறுவன கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டாப்-எண்ட் மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு புது வித கேமராவுடன் அறிமுகம் செய்தது பார்த்து Asus அதே போல புது விதமான கேமரா அறிமுகப்படுத்தியது முதல் முறையாக  புதுவிதமான கேமராவை கொண்டு வந்தது  சாம்சங் தான் அதன் பிறகு Asus  இந்தியாவில் zenfone 6 முதலில் அறிமுகம் செய்து விட்டது 

Samsung Galaxy A80  சிறப்பம்சங்கள்:

– 6.7 இன்ச் 2400×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20: 9 நியூ இன்ஃபினிட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
– டூயல் சிம்
– 48 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
– 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.2, 3D டெப்த் கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஸ்லைட் அவுட் கேமரா சாம்சங்கின் H -to -H டிஸ்பிளே போன்றவை இதில் வழங்குகிறது.இதனுடன் இதில்  முழு டிஸ்பிளே அதாவது பேசில்  இல்லாத டிஸ்பிலேவை வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் டிஸ்பிளே ஒரு 6.7 இன்ச் இருக்கிறது மேலும் இதன் ரெஸலுசன்   1080×2400 பிக்சல் இருக்கிறது.இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 20:1 இருக்கிறது 

3D கிளாஸ் பாடி மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 3700 Mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடனஅ 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. 
 
புகைப்படங்களை எடுக்க சுழலும் கேமரா மாட்யூல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 3D டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி மோட் தேர்வு செய்தால், மூன்று கேமராக்களும் பாப்-அப் முறையில் மேல் எழுந்து பின் முன்புறமாக சுழலும்.

விலை மற்றும் விற்பனை 
சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் ஏஞ்செல் கோல்டு, கோஸ்ட் வைட் மற்றும் ஃபாண்டம் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 47,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு ஜூலை 22 ஆம் தேதி துவங்கி ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விற்பனை இ-ஷாப், சாம்சங் ஒபேரா ஹவுஸ் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo