Samsung Galaxy A51 மற்றும் A71 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.

Samsung Galaxy A51 மற்றும் A71 ஸ்மார்ட்போன்கள்  அறிமுகம்.
HIGHLIGHTS

கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல்களை வியட்நாமில் அறிமுகம் செய்துள்ளது

கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா, கிரேடியன்ட் பேக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல்களை வியட்நாமில் அறிமுகம் செய்துள்ளது. இரு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

 இரண்டு புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கின்றன.கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா, கிரேடியன்ட் பேக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

Galaxy A51 

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2400 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி சென்சாருடன், 12 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஒன் யு.ஐ. 2.0 இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

Galaxy A71 

கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2400 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார், 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப்-சி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo