சாம்சங் ஸ்மார்ட்போன் சத்தமில்லாமல் அதிரடியாக அறிமுகம்
ற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இதன் ஆன்லைன் விற்பனை துவங்கும் என தெரிகிறது
சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடல்களில் கிடைக்கிறது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
Surveyஅந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரிக்களில் கிடைக்கிறது. விலையை பொருத்தவரை கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 15,999 விலையில் கிடைக்கிறது.
புதிய வேரியண்ட் கூடுதல் மெமரியுடன் கிடைக்கிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் ஹார்டுவேரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனினை 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி எனும் புதிய வேரியண்ட்டில் கிடைக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 பிராசஸர், மாலி-ஜி71 ஜி.பி.யு., அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு பை ஒ.எஸ். சார்ந்த ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 6.4 இன்ச் HD . பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED 720×1260 பிக்சல் டிஸ்ப்ளே, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 25 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இதன் ஆன்லைன் விற்பனை துவங்கும் என தெரிகிறது. கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன்- கிரஷ் பிளாக், ப்ரிஸம் கிரஷ் வைட் மற்றும் ப்ரிஸம் கிரஷ் வைலட் நிறங்களில் கிடைக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile