ரகசியமாக Samsung Galaxy A22 ஸ்மார்ட்போன் 90Hz டிஸ்பிளே உடன் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ரகசியமாக Samsung Galaxy A22 ஸ்மார்ட்போன் 90Hz  டிஸ்பிளே உடன் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
HIGHLIGHTS

Samsung Galaxy A22 இந்தியாவில் ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது

Samsung Galaxy A22 இல் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது

Samsung Galaxy A22 யில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது.

சாம்சங் இந்தியா தனது புதிய ஸ்மார்ட்போன்  Samsung Galaxy A22  இந்தியாவில் ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ 22 நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, Samsung Galaxy A22 அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே ஆஃப்லைன் கடைகளில் இருந்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாக ஒரு அறிக்கை கூறியது. சாம்சங் கேலக்ஸி ஏ 22 இல் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, தொலைபேசியில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ22 அம்சங்கள்

– 6.4 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 இன்பினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
– ARM மாலி-G52 2EEMC2 GPU
– 6 ஜிபி LPDDR4x ரேம்
– 128 ஜிபி eMMC 5.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1 கோர்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, OIS, LED பிளாஷ்
– 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
– 13 எம்பி செல்பி கேமரா, f/2.0
– பின்புறம் கைரேகை சென்சார் 
– 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
– சாம்சங் பே
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

கேலக்ஸி ஏ22 மாடலின் 4ஜி வேரியண்டை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி ஏ22 மாடலில் 6.4 இன்ச் HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
 
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Samsung Galaxy A22  விலை தகவல்.

சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் மின்ட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 18,499 ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo