சாம்சங் நிறுவனம் புதிய மற்றும் பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போனை அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Samsung Galaxy A13 5G என்பது நிறுவனத்திடமிருந்து ஒரு குறைந்த விலை 5G ஃபோன் ஆகும். Samsung Galaxy A13 5G ஆனது சிம் லாக் மற்றும் அன்லாக் செய்யப்பட்ட இரண்டு வகைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Samsung Galaxy A13 5G ஆனது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5 இன்ச் HD + டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
அன்லாக்டு Samsung Galaxy A13 5G ஆனது அமெரிக்காவில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.18,700 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.
டிசம்பர் 3 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும், மேலும் சாம்சங் நிறுவனம் இது AT&T வழியாகவும் கிடைக்கும் என்று கூறுகிறது.
இதேபோல், T-Mobile வாடிக்கையாளர்களும் Samsung Galaxy A13 5Gஐப் பெற முடியும் என்று சாம்சங் கூறுகிறது, ஆனால் இதன் வழியாக ஜனவரி 2022 வாக்கில் தான் வாங்க முடியும். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க Samsung Galaxy A13 5G இந்தியாவில் எப்போது அறிமுககும் என்பது குறித்து இதுவரை எந்த வார்த்தையும் இல்லை.
இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் அளவிலான இன்ஃபினிட்டி-வி (720×1,600 பிக்சல்கள்) HD+ டிஸ்ப்ளேவை 90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கொண்டுள்ளது.
Samsung Galaxy A13 5G ஆனது octa-core MediaTek Dimensity 700 மூலம் இயக்கப்படுகிறது, இது 4GB ரேம் மற்றும் 64GB அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இதை மைக்ரோSD கார்டு வழியாக (1TB வரை) விரிவாக்க முடியும்.
Samsung Galaxy A13 5G ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் One UI கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டது, சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில் அதன் கஸ்டம் நாக்ஸ் பாதுகாப்பு அம்சங்களையும் இணைத்துள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, Samsung Galaxy A13 5G ஆனது f/1.8 லென்ஸ் உடன் கூடிய 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் f/2.0 லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 15W வேகத்தில் சார்ஜ் செய்யக்கூடிய 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வழியாக பயனர்கள் NFC மூலமாகவும் பணம் செலுத்தலாம் மற்றும் சப்6 5G உடன் கூடுதலாக டூயல்-பேண்ட் Wi-Fi 802.11 a/b/g/n/ac-ஐயும் பெறலாம்.
Samsung Galaxy A13 5G ஆனது 3.5mm ஆடியோ ஜாக்கை கொண்டுள்ளது. நிறுவனத்தின் இந்த மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் ஆனது அளவீட்டில் 164.5×76.5×8.8mm மற்றும் எடையில் 95 கிராம் உள்ளது