Install App Install App

Samsung குறைந்த விலையில் அதன் Galaxy A13 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 02 Dec 2021
HIGHLIGHTS
  • சாம்சங் நிறுவனம் புதிய மற்றும் பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போனை அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

  • Samsung Galaxy A13 5G ஆனது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5 இன்ச் HD + டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

  • Samsung Galaxy A13 5G ஆனது அமெரிக்காவில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.18,700 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

Samsung  குறைந்த விலையில் அதன் Galaxy A13 5G ஸ்மார்ட்போன்  அறிமுகப்படுத்தியது.
Samsung குறைந்த விலையில் அதன் Galaxy A13 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியது.

சாம்சங் நிறுவனம் புதிய மற்றும் பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போனை அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Samsung Galaxy A13 5G என்பது நிறுவனத்திடமிருந்து ஒரு குறைந்த விலை 5G ஃபோன் ஆகும். Samsung Galaxy A13 5G ஆனது சிம் லாக் மற்றும் அன்லாக் செய்யப்பட்ட இரண்டு வகைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Samsung Galaxy A13 5G ஆனது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5 இன்ச் HD + டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

Samsung Galaxy A13 5G விலை, விற்பனை:

அன்லாக்டு Samsung Galaxy A13 5G ஆனது அமெரிக்காவில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.18,700 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

டிசம்பர் 3 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும், மேலும் சாம்சங் நிறுவனம் இது AT&T வழியாகவும் கிடைக்கும் என்று கூறுகிறது.

இதேபோல், T-Mobile வாடிக்கையாளர்களும் Samsung Galaxy A13 5Gஐப் பெற முடியும் என்று சாம்சங் கூறுகிறது, ஆனால் இதன் வழியாக ஜனவரி 2022 வாக்கில் தான் வாங்க முடியும். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க Samsung Galaxy A13 5G இந்தியாவில் எப்போது அறிமுககும் என்பது குறித்து இதுவரை எந்த வார்த்தையும் இல்லை.

Samsung Galaxy A13 5G சிறப்பம்சம் 

இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் அளவிலான இன்ஃபினிட்டி-வி (720x1,600 பிக்சல்கள்) HD+ டிஸ்ப்ளேவை 90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கொண்டுள்ளது.

Samsung Galaxy A13 5G ஆனது octa-core MediaTek Dimensity 700 மூலம் இயக்கப்படுகிறது, இது 4GB ரேம் மற்றும் 64GB அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இதை மைக்ரோSD கார்டு வழியாக (1TB வரை) விரிவாக்க முடியும்.

Samsung Galaxy A13 5G ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் One UI கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டது, சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில் அதன் கஸ்டம் நாக்ஸ் பாதுகாப்பு அம்சங்களையும் இணைத்துள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, Samsung Galaxy A13 5G ஆனது f/1.8 லென்ஸ் உடன் கூடிய 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் f/2.0 லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 15W வேகத்தில் சார்ஜ் செய்யக்கூடிய 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வழியாக பயனர்கள் NFC மூலமாகவும் பணம் செலுத்தலாம் மற்றும் சப்6 5G உடன் கூடுதலாக டூயல்-பேண்ட் Wi-Fi 802.11 a/b/g/n/ac-ஐயும் பெறலாம்.

Samsung Galaxy A13 5G ஆனது 3.5mm ஆடியோ ஜாக்கை கொண்டுள்ளது. நிறுவனத்தின் இந்த மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் ஆனது அளவீட்டில் 164.5x76.5x8.8mm மற்றும் எடையில் 95 கிராம் உள்ளது

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Samsung Galaxy A13 5G Smartphone Launched at low budget
Tags:
சாம்சங் 5ஜ Samsung Galaxy A13 5G Galaxy A13 5G Cheapest 5G Smartphone Cheapest 5G Phone
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
₹ 29990 | $hotDeals->merchant_name
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
₹ 26990 | $hotDeals->merchant_name
OnePlus 9R 5G (Carbon Black, 8GB RAM, 128GB Storage)
OnePlus 9R 5G (Carbon Black, 8GB RAM, 128GB Storage)
₹ 39999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M52 5G (Blazing Black, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display
Samsung Galaxy M52 5G (Blazing Black, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display
₹ 24999 | $hotDeals->merchant_name
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
₹ 29999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status