Oppo F35 Pro vs Vivo V70 FE
ஒப்போ இன்று இந்தியாவில் அதன் OPPO F35 சீரிஸ் அறிமுகம் செய்தது இதில் OPPO F35 மற்றும் OPPO F35 pro ஆகிய இரண்டு போன்களை கொண்டு வந்தது. இந்த போனில் Oppo F35 Pro மாடலின் ஆரம்ப விலை ரூ,45,999 ஆகும் இதுக்கு சரியான போட்டி மற்றும் அதே விலை ரேஞ்சில் வரும் போனிகளில் Vivo V70 FE மற்றும் Oppo F35 Pro ஆகிய போன்களின் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Oppo F35 Pro போனின் ஆரம்ப விலை 6GB+128GB ஸ்டோரேஜ் வகையின் ஆரம்ப விலை ரூ,45,999 ஆகும் அதுவே இதன் மறுபக்கம் Vivo V70 FE போனின் ஆரம்ப விலை ரூ,44,999 ஆகும்
டிஸ்ப்ளே : ஒப்போ F35 ப்ரோ, 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அதிக பிரகாச பயன்முறையில் 1,800nits பிரகாசத்துடன் கூடிய 6.78-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. V70 FE மாடலும், 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,900nits ஹை ப்ரைட்னஸ் உடன் இந்த போனில் 6.83-இன்ச் 1.5K AMOLED ஸ்க்ரீன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
ப்ரோசெசர் : Oppo, F35 Pro ஆனது ஆக்டா-கோர் டைமென்சிட்டி 7360 MAX சிப்செட்டை வழங்குகிறது. மறுபுறம், V70 FE ஆனது ஆக்டா-கோர் டைமென்சிட்டி 7360 டர்போ சிப்பை வழங்குகிறது.
இதையும் படிங்க Samsung Galaxy A08 VS Moto G37 Power: இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்?
சாப்ட்வேர் : OppoF35 Pro ஆனது ColorOS 16.5-யில் இயங்குகிறது. Vivo V70 FE போன், ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS 6 மற்றும் OxygenOS 16-இல் இயல்பாகவே இயங்குகின்றன.
கேமரா: ஒப்போ போனில் 50MP OIS + 8MP அல்ட்ராவைடு பின்புற கேமராவும், 50MP செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளன. விவோ V70 FE மாடலில் 200MP OIS முதன்மை + 8MP பின்புற கேமராவுடன் 50MP முன்புற கேமராவும் செல்பி கேமரா வழங்குகிறது.
பேட்டரி : F35 Pro மாடலில் 80W சார்ஜிங் வசதியுடன் கூடிய பிரம்மாண்டமான 8,000mAh பேட்டரி உள்ளது. V70 FE மாடலைப் பொறுத்தவரை, இது 90W சார்ஜிங் வசதியுடன் 7,000 mAh பேட்டரியை வழங்குகிறது.