Nothing 4 series
Nothing அதன் Big Billion Days சேலின் கீழ் அதன் 4a சீரிஸ்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதில் Nothing Phone (4a), Phone (4a) Pro மற்றும் Phone (4b) ஆகிய போன்கள் அடங்கும் அதாவது நீங்கள் இந்த போனை பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலின்போது பேங்க் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் வாங்கலாம். மேலும் இந்த விற்பனையானது அக்டோபர் 9, அன்று ஆரம்பமாகிறது மேலும் early access நன்மை அக்டோபர் 8 முதல் ஆரம்பமாகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
இந்த விற்பனையின் போது, Nothing Phone (4a) ப்ரோவின் 8ஜிபி + 128ஜிபி வேரியன்ட் ரூ. 49,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். 8ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி மாடல்களின் விலை முறையே ரூ. 52,999 மற்றும் ரூ. 54,999 ஆகும். இந்த மூன்று வேரியன்ட்களுக்கும் ரூ. 4,500 பேங்க் சலுகையும், ரூ. 500 எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படும் என நிறுவனம் ஒரு பத்திரிக்கை அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
வழக்கமான நத்திங் ஃபோன் (4a) 6GB + 128GB மாடலின் விலை ரூ. 3,000 குறைக்கப்பட்டுள்ளது. ரூ. 4,000 பேங்க் சலுகை மற்றும் பொருந்தக்கூடிய எக்ஸ்சேஞ்ச் பலனுக்குப் பிறகு, இதன் விலை ரூ. 32,999 ஆகக் குறைந்துள்ளது. 8GB + 128GB, 8GB + 256GB மற்றும் 12GB + 256GB மாடல்கள், பொருந்தக்கூடிய பேங்க் சலுகைக்குப் பிறகு ரூ. 40,999, ரூ. 45,999 மற்றும் ரூ. 46,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நத்திங் ஃபோன் (4b) 6GB + 128GB மாடலின் விலை, ரூ. 4,000 விலை குறைப்பு, பேங்க் சலுகை மற்றும் எக்ஸ்சேஞ்ச் பலன்களுடன் ரூ. 27,999 என்ற விலைக்குக் குறைந்துள்ளது. 8GB + 128GB மற்றும் 8GB + 256GB மாடல்கள், பொருந்தக்கூடிய வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் பலன்களுக்குப் பிறகு முறையே ரூ. 35,999 மற்றும் ரூ. 36,999 விலையில் கிடைக்கின்றன.
இதையும் படிங்க 6,000mAh பேட்டரியுடன் புதிய Redmi 17C 5G போன் அறிமுகம் இதன் விலை என்ன பாருங்க
Nothing Phone 4a போனில் 6.78 இன்ச் LTPS flexible AMOLED டிஸ்ப்ளே உடன் 120 Hz ரெப்ரஸ் ரெட்டுடன் இந்த போனில் 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் இந்த போனில் Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது இந்த போனில் ப்ரோசெசருக்கு Snapdragon 7s Gen 4 உடன் இந்த போன் Nothing OS 4.1, அடிபடையின் கீழ் இது Android 16 யில் இயங்குகிறது இதனுடன் இதில் மல்ட்டி டாஸ்கிங் கீழ் மிக சிறந்த AI சப்போர்ட் வழங்கப்படுகிறது.
கேமரா அம்சங்கள் பொறுத்தவரை nothing 4 a யில் OIS மற்றும் EIS சப்போர்டுடன் கூடிய 50 MP ப்ரைமரி Samsung GN9 சென்சார், 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 MP Samsung JN5 டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8 MP Sony IMX355 அல்ட்ராவைடு கேமராவுடன் வருகிறது மேலும் இந்த போனில் செல்ஃபிக்களுக்காக இது 32 MP Samsung KD1 முன் சென்சார் கொண்டுள்ளது. Nothing Phone (4a) போனில் 5400 mAh பேட்டரி உடன் இதில் 50W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
நத்திங் போன் 4a உடன், நிறுவனம் போன் 4a ப்ரோ ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, ஆனால் 144Hz ரெப்ரஸ் ரேட்டுடன். இது நத்திங் போனில் இதுவரை கண்டிராத மெல்லிய பெசல்களைக் கொண்டுள்ளது இதன் ஹை ப்ரைட்னஸ் 5000 நிட்ஸ். இது IP65 ரேட்டிங் கொண்டுள்ளது. மற்றும் இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த போனில் 50MP சென்சார், 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா உள்ளன. முதன்மை சென்சார் தவிர, பெரிஸ்கோப் மற்றும் அல்ட்ராவைடு கேமராக்கள் அடிப்படை மாறுபாட்டில் ஒரே மாதிரியானவை. கூடுதலாக, இரண்டு போன்களிலும் செல்ஃபிக்களுக்காக 32MP முன் கேமரா உள்ளதுமேலும் அடிப்படை மாடலைப் போலவே, 50W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. சப்ப்த்வேர் அடிப்படையில் ப்ரோ மாடல் போன் 4a இலிருந்து வேறுபட்டதல்ல.