Digit.in

Karthigai Deepam 2026:கார்த்திகை தீபம் உங்கள் அன்பான உறவினருக்கு 50 வகையான வாழ்த்து மற்றும் நேரம் பாருங்க

Karthigai Deepam 2026:கார்த்திகை தீபம் உங்கள் அன்பான உறவினருக்கு 50 வகையான வாழ்த்து மற்றும் நேரம் பாருங்க

Karthigai Deepam 2026 : கார்த்திகை தீபம் என்பது தமிழ் மாதமான கார்த்திகையில், பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படும் பழமையான தமிழர் விளக்குத் திருவிழா ஆகும். இந்த நாளில் தீப ஒளியால் அலங்கரிப்பதாகும். இந்த நாளில் இருளை நீக்கி ஒளியையும் ஞானத்தையும் வரவேற்கும் அடையாளமாக வீடுகளிலும் கோயில்களிலும் வரிசையாக அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. மேலும் இந்த நாளில் உங்கள் அன்ம்பான குடும்பம், நன்ம்பர்களுக்கு WhatsApp இன்ஸ்டாகிராமில் வாழ்த்து 50க்கும் மேலான வாழ்த்து தெரிவிக்கலாம் அதை பாருங்க

Karthigai Deepam 2026 தேதி மற்றும் நேரம் என்ன ?

இந்த ஆண்டு கார்த்திகை தீபம் நவம்பர் 24 அன்று செவ்வாய்கிழமை நடைபெறும். மேலும் பௌர்ணமி & கார்த்திகை நட்சத்திரமானது நவம்பர் 23 அன்று நள்ளிரவு 11:42 PM மணியிலிருந்து மறுநாள் அதாவது நவம்பர் 24, செவ்வாய்கிழமை அன்று இரவு 8:23PM வரை இருக்கிறது.

பரணி தீபம்: நவம்பர் 24 அதிகாலை சுமார் 4:00 மணிக்குத் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கருவறை முன்பாக ஏற்றப்படும். ஒரே சுடரிலிருந்து ஐந்து தீபங்கள் ஏற்றப்படுவது இதன் சிறப்பாகும்.

மகா தீபம்: நவம்பர் 24 மாலை சுமார் 6:00 மணிக்குத் திருவண்ணாமலை அண்ணாமலை மலை உச்சியில் உள்ள பிரம்மாண்டக் கொப்பரையில் நெய் மற்றும் திரி கொண்டு ஏற்றப்படும். அதே நேரத்தில் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருவார்.

Karthigai Deepam 2026: வாழ்த்துக்கள்

  1. அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
  2. உங்கள் வாழ்வில் ஒளியும் மகிழ்ச்சியும் என்றும் நிறைந்திருக்கட்டும். இனிய கார்த்திகை தீபம்!
  3. இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும், துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகட்டும். வாழ்த்துக்கள்!
  4. உங்கள் இல்லம் முழுவதும் மகிழ்ச்சி தீபம் ஒளிரட்டும். இனிய கார்த்திகை தீபம்!
  5. அன்பும் அமைதியும் ஆனந்தமும் உங்கள் வாழ்வில் நிறைந்திருக்கட்டும்.
  6. தீப ஒளி போல உங்கள் வாழ்க்கையும் பிரகாசிக்கட்டும்!
  7. நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடைய இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!
  8. இல்லங்கள் தோறும் தீப ஒளி, உள்ளங்கள் தோறும் மகிழ்ச்சி மலரட்டும்!
  9. இறைவனின் அருளும் ஆசியும் உங்கள் குடும்பத்திற்கு என்றும் கிடைக்கட்டும்.
  10. துன்பங்கள் மறைந்து இன்பங்கள் மலரும் இனிய திருநாள் வாழ்த்துக்கள்!
  11. உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் அன்பும் என்றும் நிலைத்திருக்கட்டும்!
  12. குடும்பம் முழுவதும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்.
  13. உங்கள் வீட்டில் செல்வமும் செழிப்பும் பெருகட்டும். இனிய கார்த்திகை தீபம்!
  14. உறவுகள் மேம்பட்டு உள்ளங்கள் மகிழட்டும்!
  15. உங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு நாளும் தீப ஒளியைப் போல அழகாக அமையட்டும்.
  16. வீட்டில் அமைதி, மனதில் நிம்மதி, வாழ்வில் வளம் பெருகட்டும்!
  17. குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்கட்டும்.
  18. உங்கள் இல்லத்தில் என்றும் மகிழ்ச்சி என்னும் தீபம் அணையாமல் ஒளிரட்டும்!
  19. அன்பான உறவுகளுடன் ஆனந்தமாக கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடுங்கள்.
  20. உங்கள் குடும்பத்தின் வாழ்வில் புதிய நம்பிக்கையும் புதிய ஒளியும் பிறக்கட்டும்!
  21. அகல் விளக்கின் அழகான ஒளியில், உங்கள் வாழ்க்கை ஆனந்தமாக மலரட்டும்!
  22. ஒரு தீபம் ஏற்றினால் இருள் விலகும், ஒரு புன்னகை பூத்தால் கவலை மறையும்!
  23. தீபத்தின் ஒளியில் துன்பங்கள் கரையட்டும், மகிழ்ச்சியின் பாதைகள் திறக்கட்டும்!
  24. ஒளி தரும் தீபம் போல, உங்கள் வாழ்க்கையும் பிறருக்கு மகிழ்ச்சி தரட்டும்!
  25. தீபங்கள் ஏற்றும் நேரத்தில், உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்!
  26. கார்த்திகை நிலவு சாட்சியாக, உங்கள் வாழ்வில் அன்பு என்றும் நிலைத்திருக்கட்டும்!
  27. ஒளிரும் தீபங்கள் சொல்லும் ஒரே செய்தி, நம்பிக்கையுடன் வாழ்வதே வாழ்க்கையின் வெற்றி!
  28. தீப ஒளியில் மலரும் மகிழ்ச்சி, உங்கள் மனதில் என்றும் நிலைக்கட்டும்!
  29. ஒவ்வொரு தீபமும் ஒரு நம்பிக்கை, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம்!
  30. இருளை வெல்லும் ஒளியாக, உங்கள் வாழ்க்கை என்றும் பிரகாசிக்கட்டும்!
  31. சிவபெருமானின் அருளால் உங்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் கிடைக்கட்டும்!
  32. அண்ணாமலையாரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். அரோகரா!
  33. இறைவனின் திருவருளால் துன்பங்கள் அனைத்தும் விலகட்டும்!
  34. கார்த்திகை தீப ஒளி உங்கள் வாழ்க்கையில் நல்வழியைக் காட்டட்டும்!
  35. முருகப்பெருமானின் அருளால் வாழ்வில் வெற்றியும் வளமும் பெருகட்டும்!
  36. சிவனின் ஜோதி ஒளி உங்கள் இல்லங்களில் என்றும் பிரகாசிக்கட்டும்!
  37. இறை நம்பிக்கை உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையைத் தரட்டும்!
  38. பக்தியும் பண்பும் நிறைந்த இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
  39. இறைவனின் அருளால் உங்கள் மனக்கவலைகள் அனைத்தும் நீங்கட்டும்!
  40. அண்ணாமலையார் துணையுடன் வாழ்வில் எல்லா நன்மைகளும் கிடைக்கட்டும்.
  41. அன்பு நண்பர்களுக்கு இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
  42. உங்கள் வாழ்க்கை ஆயிரம் தீபங்கள் ஏற்றியதைப் போல ஒளிரட்டும்!
  43. என்றும் சிரிப்புடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்!
  44. நட்பும் அன்பும் என்றும் ஒளிரட்டும். இனிய கார்த்திகை தீபம்!
  45. உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள்!
  46. மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் வாழ்க்கையில் நிறையட்டும்!
  47. கவலைகள் மறந்து கொண்டாடுவோம் ஒளிமயமான கார்த்திகை தீபத் திருநாளை!
  48. உங்கள் வாழ்க்கையில் வெற்றியும் நிம்மதியும் என்றும் தொடரட்டும்!
  49. இனிமையான நினைவுகளும் மகிழ்ச்சியான தருணங்களும் நிறைந்த திருநாளாக அமையட்டும்!
  50. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் ஒளிமயமான கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!
Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile