6,000mAh பேட்டரியுடன் புதிய Redmi 17C 5G போன் அறிமுகம் இதன் விலை என்ன பாருங்க

HIGHLIGHTS

Redmi இந்தியாவில் இன்று அதன் Redmi 17C 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த போனில் 6,000mAh பேட்டரி வழங்கப்படுகிறது

இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க

6,000mAh பேட்டரியுடன் புதிய Redmi 17C 5G போன் அறிமுகம் இதன் விலை என்ன பாருங்க

Redmi இந்தியாவில் இன்று அதன் Redmi 17C 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த போனில் 6,000mAh பேட்டரி வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் இந்த புதிய போன் ஆகும் , சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 17 5ஜி சீரிஸின் அடுத்தகட்ட வளர்ச்சியாகும். இது ஒரு பெரிய 6.9-இன்ச் திரை, 120Hz ரெப்ராஸ் விகிதம் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi 17C 5G விலை தகவல்.

இந்தியாவில் ரெட்மி 17C 5G-யின் விலை,4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலுக்கு ரூ. 20,999-யிலிருந்து தொடங்குகிறது. மறுபுறம், ஹை எண்டு 6GB + 128GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 22,999 ஆகும். இந்த போன் அக்டோபர் 7 அன்று அமேசான் மற்றும் சியோமி ஆன்லைன் ஸ்டோர் வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வரும். ரெட்மி 17C 5G, காஃபி ப்ரூ, டார்க் நைட் மற்றும் பர்பிள் டான் ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

Redmi 17C 5G சிறப்பம்சம்

Redmi 17C 5G இந்த ஃபோனில் 6.9-இன்ச் HD+ (720 x 1,600 பிக்சல்கள்) LCD டச் ஸ்க்ரீன் உடன் உள்ளது. இது 120Hz வரையிலான ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட், HBM-யில் 810 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ், 240Hz வரையிலான டச் சாம்பிளிங் ரேட், 16.7 மில்லியன் கலர்கள் மற்றும் 83 சதவீத NTSC கவரேஜ் ஆகியவற்றை வழங்குகிறது.ரெட்மி 17C 5G, டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் தாங்கும் திறனுக்காக IP64 மதிப்பீட்டைப் பெறுகிறது.

ரெட்மி 17C 5G, ஆக்டா-கோர் MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 2.4GHz வரையிலான கிளாக் ஸ்பீடை வழங்குகிறது. இந்த போனில் மாலி-G57 MC2 GPU, 6GB வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் இடம்பெற்றுள்ளன. மேலும், இது 6GB வரை விர்ச்சுவல் ரேம் அதிகரிக்கலாம் , மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்கிறது. பாதுகாப்பிற்காக,இந்த போன் Android 16 அடிபடையின் கீழ் HyperOS 3 யில் இயங்குகிறது

கேமராக்களைப் பொறுத்தவரை, ரெட்மி 17C 5G ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் f/1.8 அபெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்சல் ஒற்றைக் கேமரா உள்ளது, இது 1080p/ 30 fps வரை வீடியோக்களைப் ரெக்கார்டிங் செய்யும் பவர் கொண்டது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக f/2.0 அபெர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் முன்புற கேமராவும் உள்ளது. இதில் HDR மோட், சாஃப்ட்-லைட் ரிங், போர்ட்ரெய்ட் மோட், டைம்-லேப்ஸ் மோட் மற்றும் நைட் மோட் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க MOTOROLA யின் இந்த ஹை மாடலுக்கு ஜாக் பாட ஆபர் ஒரே அடியாக ரூ,20,000 குறைப்பு

ரெட்மி 17C 5G, 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், இந்த போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரும் உள்ளது. இது கனெக்ஷன் வசதிக்காக 5G, 4G LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஒரு USB டைப்-C போர்ட், GPS, GLONASS, மற்றும் பெய்டூ ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதில் உள்ள சென்சார்களின் லிஸ்ட்டில் ஆம்பியன்ட் லைட் சென்சார், ஆக்சிலரோமீட்டர் மற்றும் இ-காம்பஸ் ஆகியவை அடங்கும். இதன் டைமென்ஷன் 171.56 x 79.47 x 7.99 mm மற்றும் எடை சுமார் 211 கிராம் ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile