SAMSUNG GALAXY A-SERIES யின் 64MP கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும்.

SAMSUNG GALAXY A-SERIES யின் 64MP  கேமராவுடன்  விரைவில் அறிமுகமாகும்.

ரெட்மி மற்றும் ரியல்மி பிராண்டுகள் ஏற்னகவே 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்நிலையில், இரு நிறுவனங்களை தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் GALAXY A-SERIES ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

64 எம்.பி. கேமரா கொண்ட கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி 64 எம்.பி. கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

பிரபல வல்லுநரான ஐஸ் யூனிவர்ஸ் புதிய 64 எம்.பி. சென்சார் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனை சாம்சங் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யலாம் என தெரிவித்திருக்கிறார். முன்னதாக 64 எம்.பி. சாம்சங் ஸ்மார்ட்போன் சற்று தாமதமாக அறிமுகமாகும் என்றே கூறப்பட்டது.

எனினும், ரியல்மி மற்றும் ரெட்மி போன்ற பிராண்டுகள் இந்த அம்சத்தை வழங்க இருப்பதால் சாம்சங் தனது திட்டத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இதுவரை சாம்சங் உள்பட மூன்று நிறுவனங்கள் 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்திருக்கின்றன.

சாம்சங் நிறுவனம் ISOCELL பிரைட் GW1 – 64 எம்.பி. கேமரா சென்சாரை மே மாதத்தில் அறிமுகம் செய்தது. இருப்பினும் , எந்த ஸ்மார்ட்போனில் இந்த சென்சார் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 

இதில் எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் முதலில் அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் கேலக்ஸி A 70  S ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. கேமரா கொண்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்பட்டது. இது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் அதே அம்சங்களுடன் கேமரா மட்டும் மாற்றப்பட்டிருக்கும் என கூறப்பட்டது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo