Redmi யின் இந்த போனில் அதிரடியாக ரூ,10,000 குறைப்பு
நீங்கள் 20,000ரூபாய் ரேஞ்சில் போன் வாங்க விரும்பினால் Redmi Note 13 Pro+ 5G குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாக இருக்கும், தற்போது, இ-காமர்ஸ் தளமான அமேசான் பெரும் விலைக் குறைப்பால் பயனடைகிறது. வாடிக்கையாளர்கள் வங்கிச் சலுகைகளிலிருந்தும் தள்ளுபடிகளைப் பெறலாம். உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுத்தால், கூடுதல் சேமிப்பைப் பெறலாம். ரெட்மி நோட் 13 ப்ரோ+ 5ஜியில் கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் பற்றி பார்க்கலாம்.
Redmi Note 13 Pro+ 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்
Redmi Note 13 Pro+ 5G யின் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை 21,628ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இது கடந்த ஆண்டு ஜனவரியில் சந்தையில் ரூ.31,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிச் சலுகைகளைப் பற்றிப் பேசுகையில், IDFC FIRST வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 7.5 சதவீதம் (ரூ. 1,000 வரை) தள்ளுபடி பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ. 21,490 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.20,800 வரை சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, தற்போதைய நிலை மற்றும் மாற்றாக வழங்கப்படும் போனின் வேரியன்ட் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது அறிமுக விலையை விட ரூ.10,371 குறைந்த விலையில் கிடைக்கிறது.
Redmi Note 13 Pro+ 5G சிறப்பம்சம்
Redmi Note 13 Pro+ 5G ஆனது 1220×2712 பிக்சல்கள் ரெசளுசன மற்றும் 1,800 nits ஹை ப்ரைட்னாஸ் உடன் இந்த போனில் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. நோட் 13 ப்ரோ+ 5ஜி, ஆக்டா கோர் மீடியாடெக் டிமான்சிட்டி 7200-அல்ட்ரா ப்ரோசெசர் கொண்டுள்ளது. நோட் 13 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 யில் இயங்குகிறது. நோட் 13 ப்ரோ+ 5ஜி 8ஜிபி அல்லது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி அல்லது 512ஜிபி கன்டென்ட் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக அதிகரிக்கலாம் .
நோட் 13 ப்ரோ+ 5G 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 120W சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. நோட் 13 ப்ரோ + 5ஜியின் பின்புறத்தில் 200 மெகாபிக்சல் மெகபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. டைமென்சன் பற்றி பேசுகையில், நோட் 13 ப்ரோ + 5G 161.4 mm நீளம், 74.2 mm அகலம், 8.9 mm திக்னஸ் மற்றும் 205 கிராம் எடை கொண்டது.
இதையும் படிங்க: Moto G64 ஸ்மார்ட்போனில் அதிரடியாக ரூ,13,000 டிஸ்கவுண்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile