Redmi Note 10T இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும், இந்த போன் Amazon India வில் விற்பனையாகும்.

HIGHLIGHTS

ரெட்மி பிராண்டு புது ஸ்மார்ட்போனிற்கான டீசரை அமேசானில் வெளியிட்டுள்ளது

ஸ்மார்ட்போனின் பெயர் எதுவும் இடம்பெறவில்லை.

இணைய முகவரியில் புது ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10டி 5ஜி என தெரியவந்துள்ளது.

Redmi Note 10T இந்தியாவில்  விரைவில் அறிமுகமாகும், இந்த போன் Amazon India வில் விற்பனையாகும்.

சியோமியின் ரெட்மி பிராண்டு புது ஸ்மார்ட்போனிற்கான டீசரை அமேசானில் வெளியிட்டுள்ளது. டீசரில் “Fast and Futuristic” வாசகம் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பெயர் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், புகைப்படத்திற்கான இணைய முகவரியில் புது ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10டி 5ஜி என தெரியவந்துள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரெட்மி நோட் 10டி 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

– 6.5 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
– மாலி-G57 MC2 GPU
– 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
– 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 8 எம்பி செல்பி கேமரா, f/2.0 
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
– டூயல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1 
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 5ஜி மாடலின் மற்றொரு வேரியண்ட் ஆகும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலும் ரெட்மி நோட் 10 5ஜி மாடலின் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் கிரீன், புளூ, சில்வர் மற்றும் கிரே நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo