Redmi யின் முதல் 5G போன் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகமாகும்.
இந்தியாவில் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம்
Redmi Note 10T 5G இந்தியாவில் அறிமுகமாகக்கூடிய முதல் 5G போன் ஆகும்.
புதிய ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான் இந்தியாவில் இருந்து வரும்.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் பலமுறை வெளியிடப்பட்டன. அந்த வரிசையில் தற்போது இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.புதிய போன் அதன் சொந்த மூன்று ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடுகிறது Redmi Note 10, Redmi Note 10 Pro மற்றும் Redmi Note 10 Pro Max உடன் இருக்கும். Redmi Note 10T 5G இந்தியாவில் அறிமுகமாகக்கூடிய முதல் 5G போன் ஆகும்.
Surveyரெட்மி நோட் 10 5 ஜி சமீபத்தில் இந்தியாவில் போகோ எம் 3 புரோ 5 ஜி என அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மூன்று போன்களும் அம்சங்களின் அடிப்படையில் ஒத்தவை மற்றும் அனைத்திலும் மீடியா டெக் டைமன்சிட்டி 700 செயலி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான் இந்தியாவில் இருந்து வரும்.
ரெட்மி நோட் 10டி 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
– 6.5 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
– மாலி-G57 MC2 GPU
– 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
– 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
– டூயல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் கிரீன், புளூ, சில்வர் மற்றும் கிரே நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile