xiaomi சத்தமில்லாமல் இந்த ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியுள்ளது.

xiaomi  சத்தமில்லாமல் இந்த  ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியுள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் போன்களின் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். சியோமி, ஒப்போ அல்லது சாம்சங் அனைத்தும் தங்கள் போன்களின்  விலையை அதிகரித்துள்ளன. இப்போது சியோமி தனது இரண்டு போன்களான Redmi 9 Power மற்றும்  Redmi 9A ஆகியவற்றின் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது மற்றும் போன்களின் விலை ரூ .500 அதிகரித்துள்ளது. .

விலை உயர்வின் படி ரெட்மி 9 பவர் ரூ. 500 அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ. 13,499 என்றும், ரெட்மி 9ஏ மாடல் விலை ரூ. 7,499-இல் இருந்து தற்போது ரூ. 7,799 என்றும் மாறி இருக்கிறது. 

 Redmi 9 Power மற்றும்  Redmi 9A சிறப்பம்சம் 

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 பவர் மற்றும் ரெட்மி 9ஏ மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. ரெட்மி 9 பவர் மாடலில் புல் ஹெச்டி ரெசல்யூஷன், 9ஏ மாடலில் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் ஸ்கிரீன் உள்ளது. 

ரெட்மி 9 பவர் மாடலில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், ரெட்மி 9ஏ மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இவற்றில் முறையே ஸ்னாப்டிராகன் 662, மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்தவரை இரு மாடல்களிலும் 3 ஜிபி, 32 ஜிபி வழங்கப்பட்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo