6GB ரேம் கொண்ட REDMI 9 POWER ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது

6GB ரேம் கொண்ட  REDMI 9 POWER ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது
HIGHLIGHTS

ரெட்மி 9 பவர் மொபைல் போனை இந்தியாவில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது

Redmi 9 Power இதன் விலை ரூ .12,999. ஆகும்

இதில் உங்களுக்கு 4 ஜிபி ரேம் ஆர் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ .10,499 க்கு கிடைக்கும்

சிறிது நேரம் கசிந்து வதந்தி பரவிய பின்னர், இறுதியாக ரெட்மி தனது ரெட்மி 9 பவர் மொபைல் போனை இந்தியாவில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த புதிய மாடலான ரெட்மி 9 பவர் நிறுவனம் ஒரு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதன் விலை ரூ .12,999. ஆகும்  ரெட்மி 9 பவர் மொபைல் போன் ஏற்கனவே 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுக்கு கூடுதலாக 128 ஜிபி ஸ்டோரேஜில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் முதன்முதலில் இந்தியாவில் 2020 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய மாடலின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை 

 ரெட்மி 9 பவர் சிறப்பம்சங்கள் 

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அட்ரினோ 610 GPU வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. 

இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 யுஐ, கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 6000 mAh பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 3.5 எம்எம் ஆடியோஜாக், எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating), டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.

REDMI 9 POWER விலை தகவல் 

இதில் உங்களுக்கு  4 ஜிபி ரேம் ஆர் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ .10,499 க்கு கிடைக்கும், இது தவிர 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடலை ரூ .11,999 க்கு போனை  வாங்கலாம், தவிர 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ .12,999 க்கு பெறலாம். மைட்டி பிளாக், பிளேசிங் ப்ளூ மற்றும் ஃபியரி ரெட் கலர் தவிர, போன் எலக்ட்ரிக் கிரீன் கலர் ஆப்ஷனையும் கிடைக்கிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo