5000Mah கொண்ட Redmi 8 இன்று பகல் மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

5000Mah  கொண்ட Redmi 8 இன்று பகல் மணிக்கு விற்பனைக்கு வருகிறது.
HIGHLIGHTS

ரெட்மி 8 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி 8 ஆரா மிரர் டிசைனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இந்த போன் சஃபைர் ப்ளூ, ரூபி ரெட் மற்றும் ஓனிக்ஸ் பிளாக் விருப்பங்களில் கிடைக்கும். ஸ்மார்ட்போனின் இன்று பகல் 12 மணிக்கு  பிளிப்கார்ட்டில்  விற்பனைக்கு வருகிறது.

REDMI 8 PRICE AND AVAILABILITY

ரெட்மி 8 இன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .7,999 ஆகவும், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ .8,999 ஆகவும் வழங்கப்படுகிறது. ரெட்மி 8  இன்று நவம்பர் 7ஆன இன்று பகல் 12 மணிக்கு விற்பனை தொடங்கும், பயனர்கள் இதை MI.காம், பிளிப்கார்ட் மற்றும் மீ ஹோம் கடைகளில் இருந்து வாங்கலாம்.

சியோமி நிறுவனம் தனது 64 மெகாபிக்சல் போனை அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது

REDMI 8 சிறப்பம்சம் 

Redmi 8 யில் 6.22 இன்ச் கொண்ட பெரிய டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் அதன் ரெஸலுசன்  720 x 1520 பிக்சல் HD ரெஸலுசனுடன் வருகிறது மற்றும் இந்த டிஸ்பிளேவின் மேல் பகுதியில் டாட் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா அமைப்பு பற்றி பேசினால்,, ஆர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் உடன் ரெட்மி 8 இன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. கேமரா அமைப்பில் 12 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா உள்ளது, இது 1.4 மைக்ரோ பிக்சல்கள் சைஸ் கொண்டுள்ளது.மற்றும் எஃப் / 1.8 என்ற அப்ரட்ஜர் கொண்டது மற்றும் சோனியின் IMX363 இமேஜ் சென்சார் ஆகும். இரண்டாவது கேமரா 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகும், இது போர்ட்ரைட் டிஸ்பிளேகளுக்கு பயன்படுத்தப்படும். கேமரா அம்சங்களில் AI சீன டிடக்சன், கூகிள் லென்ஸ் சப்போர்ட் ஆகியவை அடங்கும். இந்த போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் AI செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 8 இன் பின்புறத்தில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது மற்றும் செக்யூரிட்டிக்கு இந்த போனில் ஃபேஸ் அன்லாக் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 5,000Mah  பேட்டரியைப் வழங்குகிறது., இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. பயனர்களுக்கு USB டைப்-சி போர்ட் கிடைக்கும், மேலும் 10W சார்ஜரும் பெட்டியில் காணப்படும்.

ரெட்மி 8 குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 SoC யில் இயக்கப்படுகிறது, இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் இரட்டை சிம் சப்போர்ட் கிடைக்கிறது மற்றும் இந்த போனின் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்டு வழியாக 512 ஜிபிக்கு அதிகரிக்கலாம். ரெட்மி 8 பி 2 ஐ ஸ்பிளாஸ் ப்ரூஃப் பினிஷ் மற்றும் IR பிளாஸ்டர் கொண்டு கொண்டு வரப்படுகிறது. கொரில்லா கிளாஸ் 5 இன் ப்ரொடெக்சன் இந்த போனின் முன்புறத்தில் கிடைக்கிறது மற்றும் 3.5 mm ஆடியோ ஜாக் மற்றும் FM ரேடியோவும் சேர்க்கப்பட்டுள்ளன

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo