Redmi 15A 5G with 32MP camera and 6300mAh battery launched Price features
Redmi 15A இந்தியாவில் 4GB RAM + 64GB, 4GB RAM + 128GB, மற்றும் 6GB RAM + 128GB என மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை ₹12,999 ஆகவும், டாப் வேரியண்ட் ₹16,499 விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. விலை உயர்வுக்குப் பிறகு, இதன் பேஸ் வேரியண்ட் ₹3,500 கூடுதலாக, அதாவது ₹16,499-க்குக் கிடைக்கும். இதன் மற்ற இரண்டு வேரியண்ட்களின் விலை ரூ,4,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்த இரண்டு வேரியண்ட்களும் முறையே ₹18,499 மற்றும் ₹20,499 விலையில் கிடைக்கும்.
ரெட்மி 15A இந்தியாவில் 4GB RAM + 64GB, 4GB RAM + 128GB, மற்றும் 6GB RAM + 128GB என மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை ₹12,999 ஆகவும், டாப் வேரியண்ட் ₹16,499 விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. விலை உயர்வுக்குப் பிறகு, இதன் பேஸ் வேரியண்ட் ₹3,500 கூடுதலாக, அதாவது ₹16,499-க்குக் கிடைக்கும். இதன் மற்ற இரண்டு வேரியண்ட்களின் விலை ₹4,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்த இரண்டு வேரியண்ட்களும் முறையே ₹18,499 மற்றும் ₹20,499 விலையில் கிடைக்கும்.
ரெட்மி 15A 5G போனில், 6.9-இன்ச் HD+ (1600 x 720 பிக்சல்கள்)ரேசளுசனுடன் இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 810 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும், இது DC டிம்மிங் மற்றும் TÜV ரைன்லேண்ட் சர்டிபிகேட் கொண்டுள்ளது. ரெட்மி 15A 5G, மாலி-G57 MC2 GPU உடன் கூடிய ஆக்டா-கோர் யூனிசாக் T8300 6nm பிராசஸரால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4GB/6GB LPDDR4X ரேம் மற்றும் 64GB/128GB UFS 2.2 ஸ்டோரேஜுடன் வருகிறது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை அதிகரிக்கலாம் . கேமரா பிரிவில் 32MP ப்ரைமரி கேமரா மற்றும் ஒரு செகண்டரி கேமரா ஆகியவை உள்ளன, அதே நேரத்தில் செல்ஃபிகளுக்காக 8MP முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரியைப் பொறுத்தவரை, ரெட்மி 15A 5G ஆனது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் ஒரு பெரிய 6300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் ஒரு சார்ஜர் பாக்சுடன் வழங்கப்படுகிறது. இது 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இந்த ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் FM ரேடியோ ஆகிய அம்சங்களும் உள்ளன. இது IP52 தரமதிப்பீட்டைக் கொண்டிருப்பதால், தூசி மற்றும் லேசான நீரை எதிர்க்கும் திறன் கொண்டது எனக் கூறப்படுகிறது. கேநேக்ஷன் பொறுத்தவரை இந்த போனில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi, புளூடூத் 5.4, GPS மற்றும் ஒரு USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்.