Realme Q2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வரும், லீக் வெளியாகியுள்ளது.

Realme Q2 ஸ்மார்ட்போன் இந்தியாவில்  விரைவில் வரும், லீக் வெளியாகியுள்ளது.
HIGHLIGHTS

Realme Q2 ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

ரியல்மி கியூ2 ப்ரோ மாடலுடன் அக்டோபர் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது

Realme Q2  ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் RMX2117 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதால், விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி கியூ2 ப்ரோ மாடலுடன் அக்டோபர் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. சீன சந்தையில் ரியல்மி கியூ2 மாடல் விலை 1299 RMB இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்தில் துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo