சத்தமில்லாமல் Realme அதன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது இதன் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க
Realme இந்தியாவில் அதன் புதிய Realme P4x 5G போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்த ரியல்மி நிறுவனம் 7000 mAh பேட்டரி கொண்ட P4x 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது
Realme P4x 5G போனின் விலை 6GB/128GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வகையின் விலை ரூ,15,499
Realme இந்தியாவில் அதன் புதிய Realme P4x 5G போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த Realmeயின் புதிய போன் மிட் ரேன்ஜ் பிரிவில் கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் இந்த ரியல்மி நிறுவனம் 7000 mAh பேட்டரி கொண்ட P4x 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், சிறந்த பர்போமன்சுக்காக வேகமான சிப்செட்டும் உள்ளது மேலும் இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyRealme P4x 5G விலை தகவல்.
Realme P4x 5G போனின் விலை 6GB/128GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வகையின் விலை ரூ,15,499.மற்றும் 8GB/256GB கொண்ட சிறந்த வகைகளின் விலை ரூ,16,999 மற்றும் ரூ,17,999 ஆகும் இதை தவிர இந்த போனை Matte Silver, Elegant Pink மற்றும் Lake Green கலரில் வாங்கலாம். மேலும் இந்த போனின் முதல் விற்பனை realme.com, Flipkart போன்றவற்றில் வாங்கலாம்.

Realme P4x 5G போன் சிறப்பம்சம்.
டிஸ்ப்ளே: இந்த ரியல்மி போனில் 6.72-இன்ச் முழு-HD ரெசல்யூஷன் டிஸ்ப்ளே உள்ளது, இது சீரான கேம்ப்ளேக்காக 90fps (வினாடிக்கு பிரேம்கள்) கொண்டது. இந்த போன் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது.
இதையும் படிங்க பட்டய கிளப்பும் ஆபர் Oppo யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ, 17,000 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்கலாம்
ப்ரோசெசர் :இந்த ரியல்மி ஃபோனில் மீMediaTek Dimensity 7400 Ultra ப்ரோசெசர் உள்ளது மேலும் இந்த போனில் மிக சிறந்த ஸ்பீட் மற்றும் ஹை பர்போமான்ஸ் வழங்கப்படுகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ்: இந்த போனில் 8 ஜிபி ரேம் உள்ளது, ஆனால் இதை மெய்நிகர் ரேம் பயன்படுத்தி 18 ஜிபி வரை விரிவாக்கலாம். கூடுதலாக, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களை சேமிக்க இந்த போனில் 256 ஜிபி சேமிப்பிடம் உள்ளது.
கேமரா: இந்த போனில் 50 மெகாபிக்சல் ப்ரைம்மரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்களுக்கு, இந்த போனில் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
பேட்டரி: இது 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய சக்திவாய்ந்த 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது ரிவர்ஸ் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது..
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile