Realme யின் புதிய 4G போன் வெறும் ரூ,7,299 யில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

Realme Narzo 80 Lite 4G இந்தியாவில் அறிமுகமானது

இது UNISOC T7250 ப்ரோசெசர் மற்றும் 6300mAh பேட்டரியுடன் வழங்கப்படுகிறது

Realme Narzo 80 Lite 4G யின் 4GB+64GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.7,299 ஆகும்

Realme யின் புதிய 4G போன் வெறும் ரூ,7,299 யில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Realme இந்தியாவில் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Realme Narzo 80 Lite 4G இந்தியாவில் அறிமுகமானது, இதன் விலை ரூ,10,000க்கும் குறைவாக இருக்கும் , மேலும் இது UNISOC T7250 ப்ரோசெசர் மற்றும் 6300mAh பேட்டரியுடன் வழங்கப்படுகிறது மேலும் இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme Narzo 80 Lite 4G விலை தகவல்

Realme Narzo 80 Lite 4G யின் 4GB+64GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.7,299 , ஆனால் ரூ.700 வவுச்சர் அல்லது ரூ.500 வவுச்சர் மற்றும் ரூ.200 பேங்க் சலுகைக்குப் பிறகு, அது ரூ.6,599 ஆகும் . 6GB+128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.8,299, ஆனால் அதே சலுகைக்குப் பிறகு, விலை ரூ.7,599 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான அமேசான் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் ஃபிளாஷ் விற்பனை ஜூலை 28 ஆம் தேதி தொடங்கும், முதல் விற்பனை ஜூலை 31 ஆம் தேதி தொடங்கும். இந்த ஸ்மார்ட்போன் Obsidian Black மற்றும் Beach Gold வண்ணங்களில் கிடைக்கிறது.

realme Narzo 80 Lite 4G சிறப்பம்சம்

டிஸ்ப்ளே:-realme Narzo 80 Lite 4G யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால்,6.74″ HD+ ஸ்க்ரீனுடன் 90Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 720 x 1600 ரேசளுசனுடன் வருகிறது மேலும் இது 180HZ ப்ரைட்னாஸ் சப்போர்டுடன் வருகிறது.

ப்ரோசெசர்:- இதன் அம்சங்களை பற்றி பேசுகையில் UNISOC T7250 Chipset உடன் ஆண்ட்ரோய்ட் 15 அடிபடையின் கீழ் OneUI யில் வேலை செய்கிறது .

ரேம் ஸ்டோரேஜ் :- மேலும் இதில் 4GB + 64GB ரேம் ஸ்டோரேஜ் மற்றும் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது.

கேமரா :-realme Narzo 80 Lite 4G போனின் கேமரா பற்றி பேசினால் இதன் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் உடன் 13MP மெயின் கேமரா மற்றும் Omnivision OV13B சென்சார் வழங்கப்படுகிறது மேலும் இதில் செல்பிக்கு 5MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

பேட்டரி:- இந்த போனில் பேட்டரி பற்றி பேசினால் 6,300mAh பேட்டரியுடன் 15W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க:Realme 15 Pro அறிமுகத்திற்கு முன்னே விலை மற்றும் பல தகவல் வெளியானது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo