Realme 15 Pro அறிமுகத்திற்கு முன்னே விலை மற்றும் பல தகவல் வெளியானது

HIGHLIGHTS

Realme அதன் புதிய போனை அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது

Realme 15 Pro ஸ்மார்ட்போன் ஜூலை 24 ஆம் தேதி மாலை 7 மணிக்கு அறிமுகமாகும்

Realme 15 Pro 5G விலை ரூ.39,999 ஆக இருக்கும்

Realme 15 Pro அறிமுகத்திற்கு முன்னே விலை மற்றும் பல தகவல் வெளியானது

Realme அதன் புதிய போனை அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது, இதில் Realme 15 சீரிஸ் களத்தில் இறக்க உள்ளது இதில் vanilla trim மற்றும் Pro வேரியன்ட் இருக்கும் இன்னும் இதன் அறிமுகத்திற்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இதன் பல் அடிப்படை தகவல்களான டிஸ்ப்ளே,டிசைன் பர்போமான்ஸ் பல தகவல் வெளித்யாகியுள்ளது மேலும் இதன் மைக்ரோசைட் ஏற்கனவே லைவ் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் Realme 15 Pro யின் விலை மற்றும் பல தகவல்களை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme 15 Pro இந்திய அறிமுக தேதி.

Realme 15 Pro ஸ்மார்ட்போன் ஜூலை 24 ஆம் தேதி மாலை 7 மணிக்கு இந்திய நேரப்படி Realme 15 5G உடன் இந்தியாவில் அறிமுகமாகும். இந்த சாதனம் Flipkart, அதிகாரப்பூர்வ மின்-கடை மற்றும் நாட்டில் உள்ள சில்லறை விற்பனை சேனல்கள் வழியாக கிடைக்கும். இருப்பினும், அதிகாரப்பூர்வ விற்பனை தேதி இன்னும் ரகசியமாகவே உள்ளது.

Realme 15 Pro எதிர்ப்பார்க்கபடும் அம்சம்.

Realme 15 Pro போனில் 6.8-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது, இதனுடன் இதில் Snapdragon 7 Gen 4 சிப்செட் மற்றும் வழங்கப்படும், மேலும் இந்த போனில் IP68 மற்றும் IP69 ரேட்டிங் உடன் வருகிறது.

மேலும் இதில் கேமரா பற்றி பேசுகையில் இந்த போனில் 50MP யின் OIS ப்ரைமரி கேமராவுடன் 50MP அல்ட்ராவைட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் முன் பக்கத்தில் 50MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது மேலும் இதில் 7,000 mAh பேட்டரியுடன் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

Realme 15 Pro 5G டிசைன்

இதன் டிசைன் பற்றி பேசினால் இதில் 7,000 mAh பேட்டரி இருந்தாலும் இதன் 7.69mm மட்டுமே இருக்கிறது எனவே நிறுவனம் இதை ஸ்லிம்மஸ்ட் போன் என கூறுகிறது. இதை தவிர இந்த போனில் ஒரு ஸ்கோயரிஷ் கேமரா மாட்யுல் வழங்குகிறது இதனுடன் இதில் கேமரா சென்சார் மற்றும் பிளாஷ் ஆகியவை வழங்கப்படுகிறது, இந்த போனின் முன் பக்கத்தில் பெஸல்லேஸ் மற்றும் பஞ்ச ஹோல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.

Realme 15 Pro 5G எதிர்ப்பர்க்கபடும் விலை தகவல்.

ஒரு டிப்ஸ்டர் பகிர்ந்து கொண்ட கசிந்த பாக்ஸ் படத்தின்படி, Realme 15 Pro 5G விலை ரூ.39,999 ஆக இருக்கும். ஆனால் வழக்கமாக, சில்லறை விலை பெட்டி விலையை விட குறைவாக இருக்கும். அறிக்கைகள் உண்மை என்று நம்பப்பட்டால், சாதனத்தின் விலை ரூ.35,999 ஆக இருக்கலாம். அதிகாரப்பூர்வ விலைகள் ஜூலை 24 அன்று வெளியிடப்படும் என்பதை நினைவில் கொள்க.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo