5000mAh பேட்டரியுடன் Realme C21Y ஸ்மார்ட்போன் அறிமுகம்.

5000mAh  பேட்டரியுடன் Realme C21Y ஸ்மார்ட்போன் அறிமுகம்.
HIGHLIGHTS

Realme அதன் சி-சீரிஸில், புதிய போன் C21Y அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

பெரிய 5000mAh பேட்டரி மற்றும் பெரிய டிஸ்ப்ளேவுடன் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

C21Y 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 3,240,000 வியட்நாம் டோங்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Realme அதன் சி-சீரிஸில், புதிய போன் C21Y அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் வியட்நாமில் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக நுழைந்துள்ளது. பெரிய 5000mAh  பேட்டரி மற்றும் பெரிய டிஸ்ப்ளேவுடன் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம் …

REALME C21Y விலை தகவல்.

C21Y  3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 3,240,000 வியட்நாம் டோங்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் போனின் 4 ஜிபி ரேம் வேரியண்ட் 3,710,000 வியட்நாமிய டோங்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் வியட்நாமில் விற்பனைக்கு கிடைக்கின்றன, மேலும் அடுத்த வாரம் முதல் இலங்கையிலும் விற்பனைக்கு வரும்.

REALME C21Y சிறப்பம்சம் 

Realme C21Y யில் 6.5 இன்ச் HD+ ட்ரூப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது, இது 20: 9 என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது, மேலும் இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த போன்  UNISOC 6T10 ஆக்டா கோர் ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே கிடைக்கிறது, இதை நீங்கள் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் அதிகரிக்க முடியும்.

கேமராவைப் பற்றி பேசுகையில்,REALME C21Y 2 எம்பி ரெட்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி மோனோ சென்சார் கொண்ட 13 எம்பி பிரைமரி கேமராவைப் வழங்குகிறது . அதாவது, மூன்று பின்புற கேமரா அமைப்பு REALME C21Y இல் கிடைக்கிறது. போனின் முன்புறத்தில் 5 எம்.பி செல்பி கேமரா கிடைக்கிறது. உங்களுக்கு போனில் ஸ்பிளாஸ் ரெஸிஸ்டண்ட் P2i பினிஸ்களை வழங்குகிறது..

Realme C21Y Android 10 ஐ அடிப்படையாகக் கொண்ட Realme UI இல் வேலை செய்கிறது. போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இது 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கனெக்டிவிட்டிக்கு , இரட்டை சிம், 4 ஜி VoLTE, வைஃபை 802.11 அ / பி / ஜி / என், புளூடூத் 5 மற்றும் GPS கிடைக்கின்றன

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo