Realme C12 புது வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது

Realme C12 புது வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
HIGHLIGHTS

Realme C12 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது

Realme C12 மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டுள்ளது.

ரியல்மி நிறுவனம் தனது சி12 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரியுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டுள்ளது.

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மோனோ கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

விலை தகவல் 

ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் பவர் புளூ மற்றும் பவர் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி சி12 புது வேரியண்ட் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய வேரியண்ட்டை விட ரூ. 1000 அதிகம் ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo