REALME 6 PRO VS POCO X2: குறைந்த விலையில் மிக சிறந்த அம்சங்கள், எது பெஸ்ட் வாங்க பாக்கலாம்..

REALME 6 PRO VS POCO X2: குறைந்த விலையில் மிக சிறந்த அம்சங்கள், எது பெஸ்ட் வாங்க பாக்கலாம்..
HIGHLIGHTS

REALME 6 PRO VS POCO X2: எது மிக சிறந்ததாக இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

சீனா ஸ்மார்ட்போன்  நிறுவனமான Realme இந்தியாவில் அதன் Realme 6 சீரிஸ்யின் 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது, இந்திய சதையில் இதன்  Realme 6 மற்றும் Realme 6 Pro  என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பன்ச் டூயல்  ஹோல் டிசைன் உடன் வருகிறது. REALME 6 PRO VS POCO X2: எது மிக சிறந்ததாக இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

REALME 6 PRO விலை தகவல்.

Realme 6 Pro  6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ .16,999 ஆகவும், 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ .17,999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ .18,999 ஆகவும் உள்ளது. தொலைபேசியின் முதல் செல் மார்ச் 13 அன்று மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகும் .

POCO X2 ஸ்மார்ட்போனின் விலை.

போக்கோ X 2 ஸ்மார்ட்போன் அட்லான்டிஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள் மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 

REALME 6 PRO VS POCO X2:  டிஸ்பிலே 

Realme 6 Pro வில்  6.6" FHD+ டிஸ்பிளே வழங்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்சன் உடன் வருகிறது மேலும் இந்த Realme 6 சீரிஸில் 90Hz  ரெஃப்ரஷ் ரெட் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. புதிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன்,வழங்கப்படுகிறது, மேலும் இது  கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்சன் உடன் வருகிறது.

REALME 6 PRO VS POCO X2 கேமரா 

Realme 6 Pro  பற்றி பேசினால்,64MP  பிரைமரி கேமரா Samsung GW1 sensor, நீண்ட போக்கஸ்க்கு 12MP சென்சார் 8MP  யின் வைட் சென்சார் மற்றும் 2MP மைக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது.கேமரா அமைப்பிற்கு போனில் 20 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் ஆதரவு மற்றும் நைட்ஸ்கேப் 3.0 ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் முன்புறத்தில் இரட்டை இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா உள்ளது, இது 16MP சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்டுள்ளது, மற்றொன்று 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்சும் இருக்கிறது..

Poco X 2எடுக்க 64 எம்.பி. சோனி சென்சார், 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. சூப்பர் மேக்ரோ மற்றும் 2 எம்.பி. போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

REALME 6 PRO VS POCO X2  பார்போமான்ஸ் 

Realme 6 ப்ரோ ஸ்னாப்டிராகன் 720 ஜி உடன் வந்த முதல் சாதனமாக மாறியுள்ளத, Realme  6 ப்ரோ 6 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி வகைகளில் வருகிறது.அதுவே இதன் மறுபக்கத்தில் Poco X2 ஸ்மார்ட்போனில், , ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

REALME 6 PRO VS POCO X2 பேட்டரி 

REALME 6 PRO  வில் 4300mAh யின் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 30W fast charging சப்போர்ட் செய்கிறது மற்றும் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் 30 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகிவிடும் என கூறுகிறது.அதுவே  POCO X2 ஸ்மார்ட்போன் பற்றி பேசினால்,4500Mah பேட்டரி உடன் வருகிறது  27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மேலும் இதில்  3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo