Dimensity 6300 சிப் உடன் Realme 14T அறிமுகம், டாப் அம்சங்கள் பற்றி பாருங்க

Dimensity 6300 சிப் உடன் Realme 14T அறிமுகம், டாப் அம்சங்கள் பற்றி பாருங்க
HIGHLIGHTS

Realme இந்திய சந்தையில் Realme 14T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது

இந்த போனில் MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் கொண்டுள்ளது

Realme 14T 5G ஸ்மார்ட்போனின் 8GB+128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.17,999

சீனா ஸ்மார்ட்போன் நிறுவனமான Realme இந்திய சந்தையில் Realme 14T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் வரிசையில் Realme 14 Pro, Realme 14 Pro+, மற்றும் the Realme 14 Pro Lite. ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும் இந்த போனில் MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் கொண்டுள்ளது மேலும் இதன் அம்சம் எப்படி இருக்கும்னு பார்க்கலாம் வாங்க.

Realme 14T 5G விலை தகவல்

Realme 14T 5G ஸ்மார்ட்போனின் 8GB+128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.17,999 ஆகவும், 8GB+256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.19,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சர்ஃப் கிரீன், லைட்டிங் பர்பிள் மற்றும் அப்சிடியன் பிளாக் ஆகிய கலரில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக, கஸ்டமர்களுக்கு Realme போனை ஆன்லைனில் வாங்கும்போது பிளாட் ரூ.1,000 பேங்க் தள்ளுபடி மற்றும் ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெறலாம். ஆஃப்லைன் கொள்முதல்களில் பேங்க் சலுகைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. இந்த போனின் முதல் விற்பனை ஏப்ரல் 25 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், ரியல்மியின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் தொடங்கி ஏப்ரல் 30 வரை தொடரும்.

Realme 14T 5G, சிறப்பம்சம்

Realme 14T 5G ஆனது முழு HD+ ரெசளுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட் , 1200 nits ஹை ப்ரைட்னாஸ் மற்றும் 2000 nits உச்ச பிரகாசத்துடன் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக இந்த போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட்சென்சார் உள்ளது. இந்த போனில் MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது. இது LPDDR4x ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதில் ரேமை மெய்நிகர் ரேம் மூலம் 10GB வரை விரிவாக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Realme UI 6 யில் இயங்குகிறது. இந்த போனில் 6,000mAh பேட்டரி உள்ளது, இது 45W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், 14T 5G யின் பின்புறத்தில் 50-மெகாபிக்சல் OmniVision OV50D40 முதன்மை கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமரா உள்ளது. வீடியோ காலிங் மற்றும் செல்ஃபிக்கு, 16 மெகாபிக்சல் சோனி IMX480 முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களில் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 300% அல்ட்ரா வால்யூம் பயன்முறை, இரட்டை மைக் சத்தம் ரத்துசெய்தல் மற்றும் கலப்பின மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஆகியவை அடங்கும். டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பிற்காக இந்த இந்த போனில் IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:ஸ்னப்ட்ரகன் 8 Gen 3 ப்ரோசெசருடன் OnePlus 13T அறிமுகம் இதன் விலை என்ன பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo