ஸ்னப்ட்ரகன் 8 Gen 3 ப்ரோசெசருடன் OnePlus 13T அறிமுகம் இதன் விலை என்ன பாருங்க
OnePlus சீனாவில் அதன் OnePlus 13 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது.
இதில் Snapdragon 8 Gen 3 சிப்செட் கொண்டுள்ளது
இதில் கர்வ்ட் எட்ஜ் பிளாட் டிஸ்ப்ளே உடன் வருகிறது
OnePlus சீனாவில் அதன் OnePlus 13 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. இதில் OnePlus 13T என்ற பெயர் கொண்டுள்ளது இதில் Snapdragon 8 Gen 3 சிப்செட் கொண்டுள்ளது மேலும் இதில் கர்வ்ட் எட்ஜ் பிளாட் டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
இருப்பினும், இதன் பின்புற பேனலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது, இது ஒரு புதிய “மெட்டல் க்யூப் டெகோ” கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. லைக்ஹ்ட் அல்லது பிற செயல்பாடுகளை மாற்றுவதற்காக எச்சரிக்கை ஸ்லைடர் கஷ்டமைஸ் பட்டன் மாற்றப்பட்டுள்ளது.
OnePlus 13T விலை தகவல்.
OnePlus 13T சீனாவில் அதன் ஆரம்ப விலை இதன் ஆரம்ப விலை CNY 3,199 ஆகும் அதே இதன் இந்திய விலை ரூ,40,000 ஆகும் மேலும் இது இந்தியாவில் எப்ப்லுது அறிமுகமாகும் என தெரியவில்லை
13T சிறப்பம்சம்.
OnePlus 13T யின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.32-இன்ச் OLED டிஸ்ப்ளே சப்போர்டுடன் 120Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது , மேலும் இதில் 1.5K பேணல் OnePlus 13R போல இருக்கிறது.
இப்போது செயல்திறனுக்கு வரும்போது, இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 செயலியில் இயங்குகிறது. அதன் AnTuTu மதிப்பெண் 1.7 மில்லியன் புள்ளிகளுக்கு மேல். இதன் பொருள், OnePlus 13R-ஐப் போலவே, OnePlus 13T-யிலும் அதே சக்திவாய்ந்த செயல்திறனை எதிர்பார்க்கலாம்.
மற்ற OnePlus 13 தொடர் போன்களைப் போலல்லாமல், புகைப்படம் எடுப்பதற்கு இதில் இரண்டு கேமராக்கள் மட்டுமே உள்ளன. இந்த இரட்டை கேமரா அமைப்பில் 50MP பிரதான கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவை அடங்கும். கடைசியாக, இது 90-வாட் வேகமான சார்ஜிங் சப்போர்டுடன் இதில் ஒரு பெரிய 6260mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Samsung யின் இந்த புதிய போனில் அறிமுக சலுகையுடன் வெறும் ரூ.24,999 யில் வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile