Realme யின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் டாப் அம்சங்கள்

Realme யின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் டாப் அம்சங்கள்
HIGHLIGHTS

Realme 12X 5G இந்தியாவில் திங்கள்கிழமை ஏப்ரல் 2 அறிமுகம் செய்யப்பட்டது,

இந்த ஃபோன் MediaTek Dimensity 6100+ SoC யில் வேலை செய்கிறது

Realme 12X 5G யில் 4GB + 128GB வேரியண்டின் விலை இந்தியாவில் 11,999ரூபாயாக இருக்கிறது

Realme 12X 5G இந்தியாவில் திங்கள்கிழமை ஏப்ரல் 2 அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஃபோன் MediaTek Dimensity 6100+ SoC யில் வேலை செய்கிறது மற்றும் SuperVOOC சார்ஜிங் சப்போர்டுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் டைனமிக் பட்டன் ஏர் ஜெச்வர் மற்றும் மினி கேப்சூல் 2.0 போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. இந்த போன் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் மற்றும் மூன்று ரேம் விருப்பங்கள் மற்றும் இரண்டு கலர் விருப்பங்களில் வழங்கப்படும். அதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Realme 12X 5G யின் இந்திய விலை மற்றும் விற்பனை

Realme 12X 5G யில் 4GB + 128GB வேரியண்டின் விலை இந்தியாவில் 11,999ரூபாயாக இருக்கிறது , இதில் ஒரு 6GB + 128GB மற்றும் டாப் ஆப தி லைன் 8GB + 128GB வேரியன்ட் இருக்கிறது, இதன் விலை முறையே ரூ.13,499 மற்றும் ரூ.14,999. இந்த போன் Flipkart மற்றும் ரியல்மி India வெப்சைட்டில் வாங்குவதற்கு கிடைக்கும்.

இருப்பினும் நிறுவனம் இதுவரை போனில் விற்பனை தேதி அறிவிக்கவில்லை ஆனால் Realme 12X 5G ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆரம்பகால பர்ட் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் போது 4ஜிபி, 6ஜிபி மற்றும் 8ஜிபி வகைகள் முறையே ரூ.10,999, ரூ.11,999 மற்றும் ரூ.13,999க்கு கிடைக்கும். ரியல்மி 12X 5G ஆனது ட்விலைட் பர்பில் மற்றும் உட்லேண்ட் கிரீன் ஆகிய இரண்டு காலர் விருப்பங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Realme 12X 5G டாப் சிறப்பம்சம்.

Realme 12X 5G டிஸ்ப்ளே

Realme 12X 5G யின் இந்த போனில் 6.72-இன்ச் முழு HD+ (2,400 x 1,080 பிக்சல் IPS LCD ஸ்க்ரீன் இருக்கிறது, இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் இருக்கிறது

ப்ரோசெசர் மற்றும் ரேம் ஸ்டோரேஜ்

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் 6nm MediaTek Dimensity 6100+ SoC யில் வேலை செய்கிறது இது Mali-G57 MC2 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது, 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 உடன் வருகிறது.

கேமரா

Realme 12X 5G யின் கேமராவை பற்றி பேசினால், இதில் டுயல் பின் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது இதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவை அடங்கும். டிஸ்பிளேயின் மேல் மையத்தில் ஹோல்-பஞ்ச் கட்அவுட்டுக்குள் முன் கேமரா அமைக்கப்பட்டுள்ளது, இதில் 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது..

ரியல்மி 12X 5G யில் ஒரு டைனமிக் பட்டன் இருக்கிறது இது சமீபத்தில் Realme 12 5G மாடலிலும் காணப்பட்டது. இந்த அம்சம் flight மற்றும் DND போன்ற மோட்கள் மாற்றுவதற்கு ஷார்ட்கட் பட்டனகவும் கேமரா ஷட்டர், ஃப்ளாஷ்லைட் போன்ற பல செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.

பேட்டரி

இந்த போனில் பேட்டரி பற்றி பேசினால், ரியல்மி 45W வயர்ட் SuperVOOC சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது Realme 12X 5G யில் 5,000mAh யின் பேட்டரி வழங்கப்படுகிறது

கனெக்டிவிட்டி

இந்த போனின் கனேக்டிவிட்டியை பற்றி பேசினால், இந்த போனில் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ளது. இது இரட்டை 5G, Wi-Fi, GPS, ப்ளூடூத் 5.3 மற்றும் USB டைப்-சி கனெக்டிவிட்டி ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த கைப்பேசியானது தூசி மற்றும் நீர் தெறிப்பிற்கு எதிரான பாதுகாப்பிற்காக IP54 ரேட்டிங் உடன் வருகிறது. இதன் எடை 188 கிராம் மற்றும் அளவு 165.6 மிமீ x 76.1 மிமீ x 7.69mm. ஆகும்

இந்த போனில் ஏர் ஜெஸ்வர் சப்போர்ட் செய்யும் இது ரியல்மி Narzo 70 Pro 5G யில் காணப்பட்டது, இது பயனர்களுக்கு தொடுதலற்ற அனுபவத்தை அளிக்கிறது. இது மினி கேப்ஸ்யூல் 2.0 ஐக் கொண்டுள்ளது, இது பயனர்களின் கால்கள் சார்ஜ் செய்தல் மற்றும் பிற முக்கிய அலர்ட்களை காட்டுகிறது.

இதையும் படிங்க:Realme 12 Pro+ 5G யில் 4,000 ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo