Realme 12 Pro+ 5G யில் 4,000 ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுன்ட்

Realme 12 Pro+ 5G யில் 4,000 ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுன்ட்
HIGHLIGHTS

Realme இந்த ஆண்டு ஜனவரி மாதம் Realme 12 Pro உடன் 12 Pro+ மாடலையும் அறிமுகம் செய்துள்ளது

Realme 12 Pro+ 5G என்பது அதிக பிரீமியம் மாடலாகும்,

Realme 12 Pro+ 5G யில் Flipkart மிக சிறந்த தள்ளுபடி ஆபர் வழங்குகிறது,

Realme இந்த ஆண்டு ஜனவரி மாதம் Realme 12 Pro உடன் 12 Pro+ மாடலையும் அறிமுகம் செய்துள்ளது இந்த போன் Realme UI 5.0 கஸ்டம் ஸ்கின்னில் வேலை செய்கிறது மற்றும் இதில் 50MP மெயின் கேமரா இருக்கிறது, இதில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 67W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது Realme 12 Pro+ 5G என்பது அதிக பிரீமியம் மாடலாகும், இதில் 12GB வரை ரேம், 64MP பெரிஸ்கோப் கேமரா சென்சார் மற்றும் அதிக சக்திவாய்ந்த Snapdragon 7s Gen 2 5G சிப்செட் உள்ளது. ஸ்மார்ட்போன் ரூ.29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது ஒரு ஆன்லைன் ரீடைலர் விற்பனையாளர் இந்த போனை பம்பர் தள்ளுபடியில் விற்கிறார்.

Realme 12 Pro+ அதிரடி தள்ளுபடி ஆபர்

Realme 12 Pro+ 5G யில் Flipkart மிக சிறந்த தள்ளுபடி ஆபர் வழங்குகிறது, 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியன்ட் ரூ. 29,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் பிளாட்ஃபார்மில் பேங்க் சலுகைகள் மூலம் ரூ 4,000 வரை குறைந்த விலையில் வாங்கலாம்.

இந்த டிஸ்கவுன்ட் பெற, நீங்கள் Axis பேங்க் HDFC பேங்க் ICICI பேங்க் அல்லது SBI பேங்கின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்த வேண்டும். Realme 12 Pro+ ஆனது 8GB + 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB + 256GB ஸ்டோரேஜ் வகைகளிலும் விற்கப்படுகிறது, அவை முறையே ரூ. 31,999 மற்றும் ரூ. 34,999 விலையில் விற்கப்படுகின்றன, ஆனால் இந்த இரண்டு வகைகளும் ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்படுகின்றன

பேங்க் ஆபர் பயன்படுத்தினால் Realme 12 Pro+ 5G யின் அடிப்படை வேரியன்ட் எபக்டிவ் விலையில் 25,999 ரூபாய் 28,999 ரூபாய் மற்றும் 31,999 ரூபாயில் வாங்கலாம் இது தவிர, மாதத்திற்கு ரூ. 5,000 முதல் நோ காஸ்ட் இஎம்ஐயிலும் ஃபோனை வாங்கலாம். பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், பேஸ் வேரியன்ட் வாங்கினால் அதிகபட்சமாக ரூ.23,400 தள்ளுபடி பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களை மாற்றினால் ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகிறது.

Flipkart யில் இந்தச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே, எப்போது வேண்டுமானாலும் அகற்றப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும். கூடுதலாக, பாதுகாப்பான பேக்கேஜிங்கிற்கு பிளாட்ஃபார்ம் ரூ. 59 – 69 வசூலிக்கிறது.

12 Pro+ சிறப்பம்சம்.

Realme 12 Pro+ 5G யில் 6.7 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரெசளுயுசன் 1,080×2,400 பிக்சல் இருக்கிறது, இது 120Hz வரை புதுப்பிப்பு வீத சப்போர்டையும் , 800 nits யின் ஹை ப்ரைட்னாஸ் அளவையும் கொண்டுள்ளது. செயலாக்க சுமை Qualcomm Snapdragon 7s Gen 2 SoC யில் வைக்கப்பட்டுள்ளது.

Realme 12 Pro Plus 5G இன் பின்புற கேமரா அமைப்பில் 50-மெகாபிக்சல் Sony IMX 890 சென்சார் மெயின் லென்ஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), OIS மற்றும் 3X ஆப்டிகல் ஜூம் கொண்ட 64-மெகாபிக்சல் OmniVision OV64B சென்சார் மற்றும் 8-megapixal ஆங்கிள் ஆகியவை அடங்கும். லென்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிர்க்காக 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

இதையும் படிங்க :Vodafone Idea ரூ,701 யில் வரும் இந்த திட்டம் ஏன் பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo