Realme 11 Pro series யின் செம்ம ஆபர் வெறும் 3 மாதங்களில்10 லட்ச போன் விற்பனையில் சாதனை

Realme 11 Pro series யின் செம்ம ஆபர் வெறும் 3 மாதங்களில்10 லட்ச போன் விற்பனையில் சாதனை
HIGHLIGHTS

Realme 11 Pro சீரிஸ் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் இந்தியாவில் 1 மில்லியன் (10 லட்சம்) யூனிட்களின் விற்பனை

இந்த போனில் 5000mAh பேட்டரி உடன் இதில் 67W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது

Realme 11 Pro சீரிஸ் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நிறைய செய்திகளை உருவாக்கி வருகிறது. 11 ப்ரோ மற்றும் 11 ப்ரோ+ ஆகிய இரண்டு மாடல்களுடன் கூடிய பிரீமியம் டிசைன் மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்களால் இந்த சீரிஸ் நுகர்வோரை கொண்டுவந்துள்ளது, அதுவும் நியாயமான விலையில். ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் இந்தியாவில் 1 மில்லியன் (10 லட்சம்) யூனிட்களின் விற்பனையைத் தாண்டியதால், இப்போது கொண்டாடுவதற்கு நிறுவனத்திற்கு கூடுதல் காரணம் கிடைத்துள்ளது.

Realme 11 Pro series சிறப்பு என்ன ?

இந்த போனின்  சிறப்பை பற்றி பேசினால், 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரேசளுசன் மற்றும்  ஒரு ஸ்மூத்  120Hz ரெப்ரஸ் ரேட்  கொண்டுள்ளது மேலும் இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், MediaTek Dimensity 7050 SoC உடன்  வருகிறது.

realme 11 pro

இந்த போனில் 5000mAh பேட்டரி உடன் இதில் 67W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது, அதுவே  Realme 11 Pro+ யில் 100W பாஸ்ட்  சார்ஜிங் இந்த போனில்  வழங்கப்படுகிறது 

இந்த  இரண்டு ஸ்மார்ட்போன்களும் 12ஜிபி வரை ரேம் வழங்குகின்றன, ஆனால் அவற்றின் ஸ்டோரேஜ் திறன்தான் அவற்றை வேறுபடுத்துகிறது. Realme 11 Pro ஆனது 512GB வரை ச்டோரேஜை வழங்குகிறது, Realme 11 Pro+ ஆனது 1TB வரை வியக்க வைக்கும் ஸ்டோரேஜை வழங்குகிறது, இது உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைக்கு நிறைய இடத்தை வழங்குகிறது.

realme 11

இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில்  போட்டோ எடுத்தால்  இந்த  இரண்டு மாடல்களும் சிறப்பாக உள்ளன. Realme 11 Pro ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது, இதில் ஹை ரேசளுசன் கொண்ட 108MP ப்ரைமரி கேமரா மற்றும் 2MP செகண்டரி  கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபிக்காக முன்பக்கத்தில் 16எம்பி கேமரா உள்ளது. ஒப்பிடுகையில், Realme 11 Pro+ மாறுபாடு 200MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய இன்னும் சிறந்த டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதேபோல், அதன் முன் கேமராவும் 32MP சென்சார் மூலம் சிறப்பாக உள்ளது.

இந்த போனின் விலை விலை பற்றி பேசுகையில் Realme 11 Pro 5G  யின் விலை .ரூ,23,999 மற்றும் Realme 11 Pro+ 5G யின் விலை ரூ,.27,999 ஆக இருக்கிறது. மேலும் இந்த போன் கர்வ்ட்  டிஸ்ப்ளே உடன் இந்த ஸ்மார்ட்போன்  வரும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo