POCO M8x 5G with 7900mAh battery and Snapdragon chip Launched in India Price specs and features
Poco நிறுவனம் இந்தியாவில் இன்று அதன் Poco M8x 5G போனை அறிமுகம் செய்தது, அதாவது இந்த நிறுவனம் இதே மாதத்தில் தான் அதன் Poco M8 Power போனை அறிமுகம் செய்தது இப்பொழுது மேலும் ஒரு புதிய போனை அறிமுகம் செய்தது. இந்த போனில் அதிகபட்சமாக 7,900mAh பேட்டரியுடன் 50-மேகாபிக்ஷால் ப்ரைமரி கேமரா கொண்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
இந்தியாவில் Poco M8x 5G-யின் விலை , 4GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட அடிப்படை மாடலுக்கு ரூ. 20,999-யில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம், ஹை என்ட் 6GB + 128GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடலின் விலை ரூ. 22,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கஸ்டமர்களுக்கு ரூ. 2,000 பேங்க் டிஸ்கவுண்டை வழங்குகிறது.
புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 27 அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு Flipkart வழியாக விற்பனைக்கு வரும். Poco M8x 5G கருப்பு, நீலம் மற்றும் லெதர் பச்சை ஆகிய கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.
Poco M8x 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால்,இதில் 6.9 இன்ச் கொண்ட HD+ LCD டிஸ்ப்ளே உடன் வருகிறது மற்றும் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் டிஸ்ப்ளே ப்ரோடேக்ஷனுக்கு கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
இப்பொழுது இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், Qualcomm Snapdragon 4 Gen 5 சிப்செட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போன 4GB RAM + 128GB மற்றும் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த போன Android 16-அடிபடையின் கீழ் HyperOS 3.இதனுடன் நான்கு ஆண்டு OS அப்க்ரேட் மற்றும் ஆறு ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:புதிய போன் அறிமுகம் செய்யும் குஷியில் POCO M8 Power 5G போனில் சரவெடி டிஸ்கவுண்ட்
கேமரா அம்சங்கள் பொறுத்தவரை இந்த போனில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்படுகிறது 50-மேகபிக்ஷால் ப்ரைமரி கேமரா இதனுடன் 2x டிஜிட்டல் ஜூம் உடன் 2 மெகாபிக்ஷல் மேக்ரோ கேமரா இருக்கிறது மற்றும் முன் புறத்தில் செல்பிக்கு 8-மேகாபிக்ஷால் கேமரா இருக்கிறது.
பேட்டரி கெப்பாசிட்டி இதில் 7,900mAh பேட்டரியுடன் 45W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வார்டு ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு 5G, 4G, LTE, WiFi USB Type C மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் செக்யூரிட்டிக்கு சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் டஸ்ட் /வாட்டர் ரெசிஸ்டன்ட்க்கு IP64 ரேட்டிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது