சத்தமில்லாமல் Poco M3 யின் 4GB ரேம் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமானது.

சத்தமில்லாமல்  Poco M3  யின் 4GB ரேம் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமானது.
HIGHLIGHTS

Poco M3 இன் 4 ஜிபி ரேம் வேரியண்ட்டை இந்தியாவில் ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது

Poco M3 ஸ்னாப்டிராகன் 662 ப்ரோசெசர் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது

போக்கோ இந்தியா தனது ஸ்மார்ட்போன் Poco M3  இன் 4 ஜிபி ரேம் வேரியண்ட்டை இந்தியாவில் ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக போகோ எம் 3 6 ஜிபி ரேம் வேரியண்டில் இருந்தது. Poco M3  டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது தவிர, இது ஒரு வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. Poco M3 ஸ்னாப்டிராகன் 662 ப்ரோசெசர் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு மட்டுமின்றி போக்கோ எம்3 புது வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது. அதன்படி போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் தற்போது 4 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 10,499
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,499
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 12,999

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல்களின் விலை முறையே ரூ. 500 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. 

அம்சங்களை பொருத்தவரை போக்கோ எம்3 மாடலில் 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
 
இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo