Poco C61 அறிமுகத்திற்க்கு முன்னே விலை சிறப்பம்சங்கள் லீக்

Poco C61 அறிமுகத்திற்க்கு முன்னே விலை சிறப்பம்சங்கள் லீக்
HIGHLIGHTS

Poco C61 என்பது இந்நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆகும்

இந்தியாவின் சர்டிபிகேசன் தளமான BIS யில் இந்த போன் பார்க்கப்பட்டது.

இது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறுகிறது. அறிமுகத்திற்கு முன்பே போனின் ரெண்டர்கள் லீக் ஆகியுள்ளது

Poco C61 என்பது இந்நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆகும், இது பற்றி இந்த நாட்களில் நிறைய பேச்சுக்கள் வெளிவந்துள்ளன உள்ளன. இந்தியாவின் சர்டிபிகேசன் தளமான BIS யில் இந்த போன் பார்க்கப்பட்டது. இது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறுகிறது. அறிமுகத்திற்கு முன்பே போனின் ரெண்டர்கள் லீக் ஆகியுள்ளது தவிர, அதன் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. ஆரம்ப 4 ஜிபி ரேம் வேரியண்டை போனில் காணலாம். இது 90Hz ரெப்ராஸ் ரேட் டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் தொடங்கப்படலாம். இதன் விலை என்ன என தெரிய வந்துள்ளது.

Poco C61 விலை , ரெண்டர் (rumored)

Poco C61 விலை அறிமுகத்திற்கு முன்பே லீக் ஆகியுள்ளது, இது Poco C51 யின் வாரிசு போனாக இருக்கும். Appuals யின் அறிக்கையின்படி, இந்த போன் 64 GB ஸ்டோரேஜ் உடன் 4 GB யின் ஆரம்ப வேரியண்டை கொண்டிருக்கும். இதன் விலை ரூ.7,499 என கூறப்படுகிறது. அதாவது இது ஒரு என்ட்ரி லெவல் போனாக ஆரம்பம் செய்ய உள்ளது. இரண்டாவது மாறுபாடு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது, இதன் விலை சுமார் ரூ.8,499 என கூறப்படுகிறது. ரெண்டர்களில், தொலைபேசி கருப்பு, நீலம் மற்றும் பச்சை கலர்களில் காணப்படுகிறது.

C61 specifications (expected)

Poco C61 யின் சிறப்பம்சம் பற்றி பேசினால், 6.71 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, HD ரெசல்யூஷன் கொண்ட Poco C61 போனில் காணப்படுகிறது. இது 90Hz ரெப்ராஸ் ரேட் 500 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டிருக்கும். போனில் கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சன் உள்ளது. இக்கருவியில் ஹீலியோ ஜி36 ப்ரோசெசர் இருக்கும் என கூறப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.

பேட்டரி திறன் 5000 mAh ஆக இருக்கும், அதனுடன் 10W சார்ஜரை வழங்க முடியும், இது Type-C போர்ட்டுடன் இருக்கும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் போனில் வழங்கப்படலாம். மேலும் இந்த போனின் பின்புறத்தில் இரட்டை கேமராவைக் காணலாம். ப்ரைம் கேமரா 8 மெகாபிக்சல்கள் என்று கூறப்படுகிறது. செல்ஃபிக்காக 5 மெகாபிக்சல் கேமராவை இந்த போன் ஆதரிக்கும். இது தவிர, 3.5 mm ஹெட்ஃபோன் ஜாக் போனில் காணலாம்.

இதையும் படிங்க:IPL 2024 Match: Free பார்க்க Airtel-Jio-Vodafone ஸ்பெசல் பிளான் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo