iPhone XS, மற்றும் iPhone XS Max அசத்தலான ஆபருடன் இன்று விற்பனைக்கு இருக்கிறது வாருங்கள்

iPhone XS, மற்றும் iPhone XS Max  அசத்தலான ஆபருடன் இன்று விற்பனைக்கு இருக்கிறது வாருங்கள்
HIGHLIGHTS

போன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 458PPI சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஐபோன் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR என அழைக்கப்படும் மூன்று மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்களுடன், ஆப்பிள் சாதனங்களில் முதல் முறை அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 458PPI சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த டிஸ்ப்ளே டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 19 மற்றும் 120Hz டச்-சென்சிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஐபோன்களில் முதல் முறையாக டூயல் சிம் சப்போர்ட் வசதி டூயல் ஸ்டான்ட்-பை இசிம் மூலம் வழங்கப்படுகிறது. எனினும் சீனாவில் மட்டும் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுகிறது.

புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6-கோர் சி.பி.யு. கொண்ட புதிய சிப்செட் 40% குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகிறது. இதனால் ஐபோனின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட அதிக நேரம் கிடைக்கும். புதிய ஐபோன் XS மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.

ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் சிறப்பம்சங்கள்:

– ஐபோன் XS: 5.8-இன்ச் 2436×1125 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளே, 3D டச்
– ஐபோன் XS மேக்ஸ்: 6.5-இன்ச் 2688×1245 பிக்சல் OLED 458ppi சூப்பர் Retina HDR டிஸ்ப்ளே, 3D டச்
– 6-கோர், ஏ12 பயோனிக் 64-பிட் 7என்.எம். பிராசஸர் 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்
– 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
– ஐ.ஓ.எஸ். 12
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
– டூயல் சிம் (இரண்டாவது இசிம் தேர்வு செய்யப்பட்ட நெட்வொர்க் மட்டும் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
– 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8
– 12 எம்பி டெலிஃபோட்டோ இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, டூயல் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்
– 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
– ட்ரூ டெப்த் கேமரா
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
– பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
– ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த ஐபோன் XS மூன்று ஸ்டோரேஜ் மடலில் வருகிறது  64GB, 256GB மற்றும் 512GB  அதன் விலை பற்றி பேசினால் பேசினால்  Rs 99,900, Rs 1,14,900 மற்றும் Rs 1,34,900 ஆக  இருக்கிறது. பெரிய  iPhone XS Max ஆரம்ப விலை  Rs 1,09,900 இது 64GB  வெர்சனின் விலை ஆகும் மற்றும்  Rs 1,24,900 மற்றும் Rs 1,44,900யின் 512GB மாடல் வகையில் கிடைக்கிறது இந்த இரண்டு போன்களையும் பிளிப்கார்ட் ,ஏர்டெல்  ஆன்லைன்  ஸ்டோர்,ரிலையன்ஸ் ஜியோ, , Paytm Mall, மற்றும் Croma நிறுவங்களின் மூலம் வாங்கலாம் இதனுடன் ரிடைலர் கடைகளில் இன்று 6 PM லிருந்து விற்பனை ஆரம்பம் ஆகிறது.

iPhone XS மற்றும் XS Max அறிமுக சலுகை 

ஃப்ளிப்கார்ட் ப்ரீ ஓர்தாருக்கு ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் ஆகியவற்றை வாங்கலாம் ,'முதல் ஆன்லைன் வாங்குவோர்களுக்கு' மாஸ்டர்கார்ட்டில் 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது, ஆனால் எக்ஸ்சேஞ்சுக்கு ரூ .100 வரை வரும். HDFC  பேங்க் கிரெடிட் கார்டுகளுடன் EMI ட்ரான்ஸாக்சனில் போன் வாங்கும் அல்லது அக்ஸிஸ் பேங்க் Buzz கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவோர் 5 சதவிகிதத்தை பெறலாம் . இரண்டு ஃபோன்களில் 199 ரூபாய்க்கு 'பர்பஸ் பைக் பேக் உத்தரவாதம்' கொடுப்பதாக Flipkart நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐபோன் XS மேக்ஸிற்காக மாதத்திற்கு 18,317 ரூபாயாகவும், ஐபோன்XS க்கு 16,650 ரூபாய்க்கும், இருக்கும் 

Paytm அறிமுக சலுகை 
Paytm அறிமுக சலுகையாக  பல நல்ல ஆபர்களை வழங்கி வருகிறது. இது ரூபா 7000 ஐ எக்ஸ்சேன்ஜ் போனஸ், இலவச ஷிப்பிங் , குறைந்த விலை EMI போன்றவற்றைக் கொண்டுள்ளது. சில நகரங்களில் ப்ரீ ஆர்டர் செய்த  நான்கு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படும்   தில்லி, சண்டிகர், நொய்டா, குர்கான், கஜியாபாத், அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் லக்னோ ஆகியவை அடங்கும்.

மேலும் இதை பற்றிய அனைத்து தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo