Oppo Reno Z பிளிப்கார்ட்டில் ஓபன் சேலில் கொண்டுவரப்பட்டுள்ளது.

Oppo Reno Z பிளிப்கார்ட்டில்  ஓபன் சேலில் கொண்டுவரப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

இந்தியாவில் ஒப்போ ரெனோ Z ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல், ரூ.29,990 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது லுமினஸ் பிளாக், ஸ்கை வைட் மற்றும் போலார் லைட் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

ஒப்போ நிறுவனம் தனது ரெனோ Z ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD. பிளஸ் AMOLED வாட்டர்-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.மேலும் இது தற்பொழுது பிளிப்கார்டில் ஓபன் சேலில் கொண்டுவரப்பட்டுள்ளது.

விலை தகவல் 
இந்தியாவில் ஒப்போ ரெனோ Z ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல், ரூ.29,990 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது லுமினஸ் பிளாக், ஸ்கை வைட் மற்றும் போலார் லைட் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இதன் ஆபர் பற்றி பேசினால், HDFC  வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 5 சதவீத தள்ளுபடி, ரூ.3,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் மதிப்பு வழங்குகிறது .மேலும் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலிருந்து வாங்கினால்,2,500 செலுத்தி வாங்க முடியும் மேலும் பல தகவலுக்கு  பிளிப்கார்ட் வெப்சைட்டில்  காணலாம்.

Oppo Reno Z சிறப்பம்சம்.
ஒப்போ ரெனோ Z  ஆனது 6.53 இன்ச் அளவிலான (1,080 x 2,340 பிக்சல்கள்) அமோல்டு டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அது 19.5: 9 என்கிற அளவிலான திரை விகிதம், 91.6 சதவீதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை அதன் முன் மற்றும் பின்புறத்தில் கொண்டுள்ளது.

 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ பி 90 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 2இசட் ஆனது ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது, இது VOOC 3.0 ப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

கேமராவை பொறுத்தவரை,  48 மெகாபிக்சல் அளவிலான சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார்,  8 மெகாபிக்சல் அளவிலான வைட் ஆங்கிள் லென்ஸ் (119 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ), 2 மெகாபிக்சல் அளவிலான மோனோக்ரோம் சென்சார் ஆகியவைகளை உள்ளடக்கிய மூன்று பின்பக்க கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பீ கேமரா உள்ளது. ஒப்போ ரெனோ 2இசட்டின் கேமரா அம்சங்களில் அல்ட்ரா டார்க் மோட், அல்ட்ரா ஸ்டெடி மோட், ஏஐ பியூட்டி மோட் மற்றும் ஆம்பியண்ட் லைட் மோட் ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன. அங்கீகாரத்திற்காக இது ஆப்டிகல் ஜி3 இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo