Oppo Reno Ace வின் 4000Mah பேட்டரி பாஸ்ட் சார்ஜிங் செய்யும் வசதி கொண்ட புதிய தொழில்நுட்பம்.

Oppo Reno Ace வின் 4000Mah  பேட்டரி பாஸ்ட் சார்ஜிங் செய்யும் வசதி கொண்ட புதிய தொழில்நுட்பம்.
HIGHLIGHTS

புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்துவிடுகிறது

Oppo Reno Ace புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை ஸ்மார்ட்போனின் சார்ஜிங் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இரு ஒப்போ ஸ்மார்ட்போன்களில் ஒன்று 65 வாட் சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடனும், மற்றொன்று சாதாரன சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேட்டரி 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடுகிறது. ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 வாட் சார்ஜர் மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ ஏஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

அதில் புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்துவிடுகிறது. இதே பதிவு ஒப்போவின் அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்டில் பதிவிடப்பட்டது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் ஒப்போவின் புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.

 எனினும், வரும் நாட்களில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் டீசர் வடிவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo