Oppo யின் தீபாவளி எடிசன் அறிமுகம் தொட்ட உடனே கலர் கலரா மாத்தும் செம்ம போன்

HIGHLIGHTS

Oppo அதன் Oppo Reno 14 5G யின் தீபாவளி எடிசன் அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்த போனின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் மேஜிக் நிறைந்த மாயாஜால பின்புற பேனல் ஆகும்

Oppo யின் தீபாவளி எடிசன் அறிமுகம் தொட்ட உடனே கலர் கலரா மாத்தும் செம்ம போன்

Oppo அதன் Oppo Reno 14 5G யின் தீபாவளி எடிசன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த போனின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் மேஜிக் நிறைந்த மாயாஜால பின்புற பேனல் ஆகும், இது உங்கள் பாடி வெப்பநிலையைப் பொறுத்து நிறத்தை மாற்றுகிறது! இந்த கருப்பு போன் உங்கள் கைகளில் கிடைத்தவுடன் தங்க நிறமாக மாறும். இந்த தனித்துவமான தீபாவளி எடிசன் போனின் விலை, சலுகைகள் மற்றும் அனைத்து அம்சங்களையும் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oppo Reno14 5G எடிஷன் விலை தகவல்.

Oppo Reno14 5G தீபாவளி பதிப்பின் 8GB + 256GB storej வகையின் விலை ரூ.39,999 ஆகும் , ஆனால் சிறப்பு பண்டிகை சலுகைக்குப் பிறகு, விலை ரூ.36,999 ஆகக் குறைக்கப்படும். kastamar இந்த ஸ்மார்ட்போனை Oppo இ-ஸ்டோர், இ-காமர்ஸ் தளமான Flipkart, Amazon மற்றும் reetailar விற்பனை நிலையங்களில் இருந்து வாங்க முடியும்.

Oppo Reno14 5G தீபாவளி எடிஷன்

Oppo Reno14 5G தீபாவளி எடிஷன் 1.5K ரெசளுசன் , 120Hz ரெப்ரஸ் ரேட் , 1200 nits ப்ரைட்னஸ் , 240Hz டச் வேரியன்ட் மற்றும் 93% ஸ்க்ரீன்-க்கு-பாடி ரேசியோ கொண்ட 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. MediaTek Dimensity 8350 ப்ரோசெசர் இயக்கப்படும் இந்த போன் , Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 15 யில் இயங்குகிறது. Reno14 5G 80W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் AI HyperBoost 2.0 மற்றும் AI LinkBoost 3.0 உடன் பல அம்சங்களை வழங்குகிறது. GenAI ஒருங்கிணைப்புடன், Reno14 5G AI Translate, AI Voicescribe, AI Mind Space, Circle to Search மற்றும் பல போன்ற கருவிகளுடன் வருகிறது.

இதையும் படிங்க:வேற லெவல் மிரட்டும் Amazon பக்கவான ஆபர் Oppo இந்த போனில் ஒரே அடியாக ரூ,12,000 டிஸ்கவுண்ட்

Reno14 5G தீபாவளி எடிசன் , வெப்ப பொறுத்து நிறத்தை மாற்றும் தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இதன் GlowShift தொழில்நுட்பம், உடல் வெப்பநிலையைப் பொறுத்து போனின் பின்புற பேனலை டீப் பெஸ்டிவல் கருப்பு நிறத்தில் இருந்து பளபளப்பான தங்கமாக மாற்றுகிறது. இது 28°C க்குக் கீழே, 29-34°C க்கு இடையில் நிறத்தை மாற்றுகிறது, மேலும் 35°C க்கு மேல் முழு தங்கமாக மாறுகிறது.

Reno14 தீபாவளி எடிசன் பிரீமியம் எடிசன் மற்றும் நீடித்துழைப்பை வழங்குகிறது. இது விண்வெளி-தர அலுமினிய பிரேம் , கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i மற்றும் ஸ்பாஞ்ச் பயோனிக் குஷனிங் கொண்ட ஆல்-ரவுண்ட் ஆர்மர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது 7.42 மிமீ தடிமன் மற்றும் 187 கிராம் எடை கொண்டது. இந்த போன் IP66, IP68 மற்றும் IP69 ரெட்டின்குடன் வருகிறது, இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உறுதி செய்கிறது.

கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், ரெனோ 14 5ஜி தீபாவளி எடிசனில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 50 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இது ஒப்போவின் மேம்பட்ட ஹைப்பர்டோன் இமேஜிங் எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. AI ரீகம்போஸ், AI பெஸ்ட் ஃபேஸ், AI பெர்ஃபெக்ட் ஷாட், AI அழிப்பான் மற்றும் AI எடிட்டர் 2.0 ஐ அடிப்படையாகக் கொண்ட AI ரிஃப்ளெக்ஷன் ரிமூவர் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo