Oppo K13 Turbo மற்றும் K13 Turbo Pro பவர்புல்லான 7000mAh பேட்டரியுடன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
Oppo இன்று அதன் Oppo K13 Turbo சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது
இதன் கீழ் Oppo K13 Turbo மற்றும் Oppo K13 Turbo Pro ஆகியவை அடங்கும்
இந்த போன் 7,000mAh பேட்டரியுடன் 80W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கும்
Oppo இன்று அதன் Oppo K13 Turbo சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது இதன் கீழ் Oppo K13 Turbo மற்றும் Oppo K13 Turbo Pro ஆகியவை அடங்கும், இந்த போன் 7,000mAh பேட்டரியுடன் 80W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கும் இதனுடன் இந்த போனின் ஆரம்ப விலை ரூ,24,999 ஆக இருக்கிறது மேலும் இதன் விலை விற்பனை மற்றும் முழு விவரங்களை பார்க்கலாம்.
SurveyOppo K13 Turbo மற்றும் K13 Turbo Pro விலை தகவல்.
Oppo K13 Turbo ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.27,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. அதே நேரத்தில் 8GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் அளவு கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.3,000 தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வருகிறது. ஆகஸ்ட் 18 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
மறுபுறம், Oppo K13 Turbo Pro ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.37,999 ஆகும். 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.39,999 ஆகும். கஸ்டமர்கள் ரூ.3,000 தள்ளுபடி பெறலாம். ஆகஸ்ட் 15 முதல் இது விற்பனைக்கு வரும்.
Oppo K13 Turbo, K13 Turbo Pro சிறப்பம்சம்.
டிஸ்ப்ளே :-Oppo K13 Turbo சீரிஸ் இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.80-இன்ச் 1.5K (1,280×2,800 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன, இது 120Hz வரை ரெப்ரஸ் ரேட் , 240Hz வரை டச் வேரியன்ட் மற்றும் 1,600 nits உலகளாவிய ப்ரைடனாஸ் சப்போர்ட் செய்கிறது .
போசெசர்:-Oppo K13 Turbo மீடியாடெக் டிமான்சிட்டி 8450 சிப்செட்டால் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் Pro வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 4 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டுமே 12GB வரை RAM மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் விருப்பத்தைக் கொண்டுள்ளன.

கேமரா:-கேமராவைப் பற்றிப் பேசுகையில், Oppo K13 Turbo மற்றும் K13 Turbo Pro ஆகியவை 50MP முதன்மை சென்சார் மற்றும் 2MP இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. முன்புறத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. வெப்ப மேலாண்மைக்காக, இந்த போன்களில் உள்ளமைக்கப்பட்ட மின்விசிறிகள், காற்று குழாய்கள் மற்றும் 7,000 சதுர mm வேப்பர் கூலிங் ரூம் ஆகியவை உள்ளன.
இதையும் படிங்க:Infinix புதிய போன் AI அம்சங்களுடன் அறிமுகம் கேமரகளின் கவரும் வகையில் இருக்கும்
பேட்டரி:-பேட்டரியைப் பற்றிப் பேசுகையில், Oppo K13 Turbo மற்றும் Pro இரண்டும் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன, இது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போன்கள் Android 15 அடிப்படையிலான ColorOS 15.0.2 இல் இயங்குகின்றன, மேலும் இரண்டு வருட முக்கிய OS புதுப்பிப்புகளையும் மூன்று வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் பெறும்.
கனெக்ஷன்:-கனேக்சனுக்காக , இது 5G, 4G, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, GPS, NFC மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் IPX6, IPX8 மற்றும் IPX9 நீர் எதிர்ப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile