Infinix புதிய போன் AI அம்சங்களுடன் அறிமுகம் கேமரகளின் கவரும் வகையில் இருக்கும்

HIGHLIGHTS

Infinix இந்தியாவில் அதன் புதிய Infinix GT 30 5G+ போனை அறிமுகம் செய்தது

இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி+ 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.19,499

இந்த போனை பல்ஸ் கிரீன், சைபர் ப்ளூ மற்றும் சைபர் பிளேட் வைட் நிறங்களில் வாங்கலாம்.

Infinix புதிய போன் AI அம்சங்களுடன் அறிமுகம் கேமரகளின் கவரும் வகையில் இருக்கும்

Infinix இந்தியாவில் அதன் புதிய Infinix GT 30 5G+ போனை அறிமுகம் செய்தது, இந்த TV AI அம்சங்களுடன் 6.78 இன்சின் LTPS AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது மேலும் நீங்கள் ஒரு கேமராக இருந்தால் உங்களுக்கு இந்த போன் கட்டாயம் பிடிக்கும் மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Infinix GT 30 5G+விலை தகவல்

இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி+ 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.19,499 மற்றும் 8ஜிபி + 256ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ.20,999. இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் அதிகாரப்பூர்வ தளம் மற்றும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த போனை பல்ஸ் கிரீன், சைபர் ப்ளூ மற்றும் சைபர் பிளேட் வைட் நிறங்களில் வாங்கலாம்.

Infinix GT 30 5G+ சிறப்பம்சம்.

Infinix GT 30 5G+ யின் இந்த போன் அம்சம் பற்றி பேசினால் இதில் 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் இது 144Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் கொண்டுள்ளது இதனுடன் இதில் 4500nits ப்ரைட்னாஸ் உடன் TUV Rheinland கண் பாதுகாப்பு (eye care) சர்டிபிகேஷன் மற்றும் கொர்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது .

மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் MediaTek Dimensity 7400 SoC அடிப்படையின் கீழ் XOS 15 உடன் Android 15 யில் இயங்குகிறது 8GB யின் LPDDR5X RAM மற்றும் 256GB யின் UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது மேலும் இந்த போனில் இரண்டு முக்கிய OS அப்க்ரேட் மற்றும் மூன்றாண்டு செக்யுரிட்டி அப்டேட் வழங்குகிறது.

கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, GT 30 5G + பின்புறத்தில் 64 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலிர்க்காக 13 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

இதையும் படிங்க:Vivo யின் இந்த போனில் வேற லெவல் டிஸ்கவுண்ட் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு

இந்த இன்ஃபினிக்ஸ் இந்த போனில் 5,500mAh பேட்டரி உள்ளது, இது 45W வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. டைமென்ஷன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 163.7 mm, அகலம் 75.8 mm, திக்னஸ் 7.99 mm மற்றும் எடை 187 கிராம். இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிச்டன்ட் பாதுகாப்பிற்காக IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் AI அம்சங்களையும் சப்போர்ட் செயகிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo