ஒப்போ நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ்11 அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி முதல் ரெனோ 2எப், ரெனோ 10எக்ஸ் ஜூம் மாடலுக்கும், ஒப்போ எப்15 மாடலுக்கு ஜனவரி 29 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது
ஒப்போ நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ்11 அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் பீட்டா மற்றும் அதிகாரப்பூர்வ வெர்ஷன்களை பெறும் ஸ்மார்ட்போன்களின் பெயர் இடம்பெற்று இருக்கிறது
Survey
✅ Thank you for completing the survey!
ஒப்போ பைண்ட் எக்ஸ்2, பைண்ட் எக்ஸ்2 ப்ரோ, பைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஆட்டோமொபைல் லம்போர்கினி எடிஷன், ஒப்போ எப்17 ப்ரோ, ரெனோ 4எப், ஒப்போ ஏ93, ரெனோ 4 ப்ரோ 5ஜி, ரெனோ 4 ப்ரோ 4ஜி, ரெனோ 4 4ஜி, ரெனோ 4 லைட், ரெனோ 3 ப்ரோ 4ஜி, ரெனோ 3 4ஜி மற்றும் ஒப்போ ஏ72 உள்ளிட்ட மாடல்கள் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 ஸ்டேபில் அப்டேட் பெற இருக்கின்றன.
மேலும் உலகின் எந்தெந்த பகுதிகளில் இந்த அப்டேட் வழங்கப்பட இருக்கிறது என்ற விவரங்களையும் ஒப்போ தெரிவித்து உள்ளது. படிப்படியாக வெளியிடப்படுவதால் ஒரே ஒப்போ போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்க சிலகாலம் ஆகும் என தெரிகிறது.
ஜனவரி 26 ஆம் தேதி முதல் ரெனோ 2எப், ரெனோ 10எக்ஸ் ஜூம் மாடலுக்கும், ஒப்போ எப்15 மாடலுக்கு ஜனவரி 29 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
ஒப்போ எப்11, ஒப்போ எப்11 ப்ரோ மற்றும் எப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் மாடல்களுக்கு இன்று முதல் இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் அப்டேட் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஒப்போ ஏ52, ஒப்போ ஏ9 மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile