OnePlus Nord N30 5G போன் 50 W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம். டாப் 5 அம்சம் தெரிஞ்சிக்கோங்க.

OnePlus Nord N30  5G  போன் 50 W  பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம். டாப் 5 அம்சம் தெரிஞ்சிக்கோங்க.
HIGHLIGHTS

OnePlus நிறுவனம் அதன் புதிய OnePlus Nord N30 5G ஐ அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது..

புதிய போன் ஒன்பிளஸ் நார்ட் என்20 5ஜியின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாகும்

OnePlus Nord N30 5G யில் Snapdragon 695 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது.

OnePlus நிறுவனம் அதன் புதிய OnePlus Nord N30 5G ஐ அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது.. OnePlus Nord N30 5G ஒன்பிளஸ் அமெரிக்க தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.புதிய போன் ஒன்பிளஸ் நார்ட் என்20 5ஜியின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாகும் , OnePlus Nord N30 5G யில் Snapdragon 695 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது. 

OnePlus Nord N30 5G யின் விலை தகவல்.

OnePlus Nord N30 5G யின் இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வெளியிடப்பட்டது, இதன் விலை $299.99 அதாவது சுமார் ரூ.24,800. க்ரோமாடிக் கிரே நிறத்தில் இந்த போனை வாங்கலாம்.

OnePlus Nord N30 5G சிறப்பம்சம் 

OnePlus Nord N30 5G டிஸ்பிளே 

OnePlus Nord N30 5G  யின் இந்த போனில்  6.72 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. மற்றும் இதில் 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்துடன் sRGB, டிஸ்ப்ளே P3 மற்றும் டார்க் மோட் ஆகியவை டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும்.

OnePlus Nord N30 5G  ப்ரோசெசர் 

ஃபோன் Adreno 619 GPU, 8 GB LPDDR4X ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 695 ப்ரோசெசருடன் கிராபிக்ஸ் 128 GB ஸ்டோரேஜை வழங்குகிறது . Android 13 அடிப்படையிலான OxygenOS 13 போனில் கிடைக்கிறது.

OnePlus Nord N30 5G கேமரா 

கேமராவைப் பற்றி பேசுகையில், இது மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது, இதில் முதன்மை லென்ஸ் 108 மெகாபிக்சல் Samsung S5KHM6SX03 சென்சார் ஆகும். இரண்டாவது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள் மற்றும் மூன்றாவது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ ஆகும். போனுடன் 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

OnePlus Nord N30 5G பேட்டரி 

இந்த போனில், 5000mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 50W SuperVOOC வயர் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

OnePlus Nord N30 5G  கனெக்டிவிட்டி 

கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இதில் , 5G, GPS, WiFi 802.11 a/b/g/n/ac மற்றும் Bluetooth v5.1 ஆகியவற்றுக்கான சப்போர்ட் உள்ளது. ஃபோனில் ஒரு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo