OnePlus Nord CE4 இந்தியாவில் அறிமுக தேதி வெளியானது

OnePlus Nord CE4 இந்தியாவில் அறிமுக தேதி வெளியானது
HIGHLIGHTS

OnePlus யின் புதிய ஸ்மார்ட்போன் OnePlus Nord CE4 இந்தியாவில் அடுத்த மாதம் ஏப்ரல் 1 அறிமுகமாமாகும்,

இது OnePlus Nord CE3 யின் வாரிசாக இருக்கும் இது இந்திய சந்தையில் நிறைய தலைப்புச் செய்திகளை உருவாக்கியது.

OnePlus Nord CE4 ஆனது டேப்லட் வடிவ கேமரா மாட்யுல் மற்றும் LED ஃபிளாஷ் கொண்ட இரட்டை கேமரா செட்டிங் கொண்டிருக்கும்

ஒன்ப்லஸ் யின் புதிய ஸ்மார்ட்போன் OnePlus Nord CE4 இந்தியாவில் அடுத்த மாதம் ஏப்ரல் 1 அறிமுகமாமாகும், இது OnePlus Nord CE3 யின் வாரிசாக இருக்கும், இது இந்திய சந்தையில் நிறைய தலைப்புச் செய்திகளை உருவாக்கியது. Nord CE4 தொடர்பான மைக்ரோசைட் Amazon மற்றும் ஒன்ப்லஸ் வெப்சைட்டில் லைவ் செய்யப்பட்டது. இதிலிருந்து, வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் பிற அம்சங்களை மதிப்பிடலாம். ஒன்ப்லஸ் Nord CE4 ஆனது டேப்லட் வடிவ கேமரா மாட்யுல் மற்றும் LED ஃபிளாஷ் கொண்ட இரட்டை கேமரா செட்டிங் கொண்டிருக்கும் என்பதை மைக்ரோசைட் வெளிப்படுத்துகிறது.

இந்த போனில் டாப்பில் IR ப்ளஸ்ட்டர் வழங்கப்படுகிறது, நிறுவனம் அதன் இருப்பை உறுதிப்படுத்தவில்லை என்றாலும். அறிக்கைகளின்படி, புதிய ஒன்ப்லஸ் ஐ டார்க் குரோம் மற்றும் டார்க் பிளாக் என இரண்டு கலர் விருப்பங்களில் வாங்கலாம்.

OnePlus Nord CE4 சிறப்பம்சம்.

நிறுவனம் இதில் சில அம்சங்களை உறுதி செய்துள்ளது, இதில் மிக முக்கியமானது Qualcomm Snapdragon 7 Gen 3 ப்ரோசெச்சர், இதனுடன் Andreno 720 GPU உடன் வருகிறது. இதன் பொருள் செயல்திறன் அடிப்படையில் சாதனம் ஏமாற்றமடையாது. போனில் இரட்டை பின்புற கேமரா செட்டிங் வழங்கப்படும்.

ஒன்ப்லஸ் Nord CE4 சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இருப்பினும் இந்த போன் பற்றிய அதிக தகவல் வெளியாகவில்லை பேட்டரி மற்றும் சார்ஜிங் போன்றவற்றில் நிறுவனம் புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய அறிக்கைகள் ஒன்ப்லஸ் Nord CE4 ஆனது 50 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டிருக்கும், மேலும் 8 MP லென்ஸ் ஆதரவாக வழங்கப்படும். இந்த போனில் செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா இருக்கும்.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட ஒன்ப்லஸ் Nord CE3 மற்றும் அதன் லைட் வெர்சன் இந்தியாவில் பிடித்திருந்தது. லைட் வெர்ஷனுக்கு திருவிழாக்களில் நல்ல விற்பனை கிடைத்தது. ஒன்ப்லஸ் Nord CE4 தொடர்பாக பயனர்களின் பதில் என்ன என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

இதையும் படிங்க:திடிரென ஷாக் கொடுத்த Airtel இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo