Oneplus nord 6
Oneplus இன்று புதிய போனை சந்தையில் இறக்கியுள்ளது இந்த போன் அதன் Nord வரிசையில் கொண்டுவரப்பட்டது, இந்த போனின் பெயர் OnePlus Nord 6 ஆகும் இதில் அதிகபட்சமாக 9000 Mah பேட்டரியுடன் இதில் Sunburst AMOLED (Flex) டிஸ்ப்ளே மற்றும் Qualcomm® Snapdragon™ 8s Gen 4 வழங்குகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்த போனின் விலை பற்றி பேசினால் OnePlus Nord 6 யின் அடிப்படை மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ,38,999 என்ற விலையில் வருகிறது, அதே சமயம் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ,41,999 ஆகும்.
இருப்பினும், ஆக்சிஸ் பேங்க் மற்றும் HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ட்ரேன்ஸ்செக்ஷன் செய்வதன் மூலம் ரூ.2,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டை பெறலாம் . இந்தக் கார்டுகளைப் பயன்படுத்தி நீங்கள் EMI மூலம் பணம் செலுத்தினால், ரூ. 3,000 தள்ளுபடி கிடைக்கும்,நீங்கள் இந்த போனை ரூ. 35,999க்கு வாங்கலாம் . தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் 6 மாதங்கள் வரை வட்டியில்லா இஎம்ஐ வசதியையும் பெறலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 6, ஏப்ரல் 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். இந்த போனை அமேசான் இந்தியா மற்றும் oneplus அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வாங்கலாம். மேலும், இது ஒன்பிளஸ் ஸ்டோர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடைளர் விற்பனைக் கடைகள் மூலமும் வாங்கலாம்.
இதையும் படிங்க:சேலுக்கு நாங்க ரெடி வாங்க நீங்க ரெடியா Redmi புதிய ஸ்பெஷல் எடிஷன் இன்று முதல் முறையாக விற்பனை
OnePlus Nord 6 போனில் 6.78-இன்ச் Sunburst AMOLED (Flex) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதனுடன் இந்த போனில் 1.5K ரெசல்யூஷன் மற்றும் 165Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன் Qualcomm® Snapdragon™ 8s Gen 4 பிராசஸரால் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில் இது 8GB மற்றும் 12GB ரேம் உடன், 256GB ஸ்டோரேஜுடன் வருகிறது. இருப்பினும், விர்ச்சுவல் ரேம் பயன்படுத்தி 12GB வரை கூடுதல் இன்டர்னல் மெமரியைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் ரேமை அதிகரிக்கலாம் மேலும் இந்த இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ்-இல் (OxygenOS) இயங்குகிறது.
கேமரா செட்டிங் பொறுத்தவரை, இந்த ஃபோனில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் உள்ளது. வீடியோ ரெக்கர்டிங்கிர்க்கு 4K சப்போர்ட் கிடைக்கிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரியைப் பற்றி பேசுகையில் இந்த OnePlus Nord 6 போனில் 9000mAh பேட்டரியுடன் வருகிறது. இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் வழங்குகிறது . இந்த ஃபோனில் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. மென்பொருளைப் பொறுத்தவரை, கனெக்ஷன் வசதிகுக்கு 5G, Wi-Fi 7, ப்ளூடூத் மற்றும் NFC சப்போர்ட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக இந்த ஃபோனில் இன் ஸ்க்ரீன் பிங்கர்ப்ரின்ட் சென்சாரும் வழங்குகிறது .