oneplus n6x
Oneplus போனின் அறிமுக தேதியை வெளிட்யிட்டுள்ளது, ஒந்த போனை இம்மாதம் இறுதியில் வர இருக்கிறது, இந்த போனேன் அறிமுக தகவலை பற்றி இ-காமர்ஸ் தளமான அமேசான் மைக்ரோ சைட்டில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இந்த போனின் அறிமுக தேதி மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஒன்பிளஸ் 5ஜி போன், ஜூலை 31 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்தத் சீரிஸின் முந்தைய மாடலானOnePlus N6X- போலவே, இதுவும் அமேசானில் பிரத்தியேகமாக வழங்கப்படும். இந்த போனின் பின்புற பேனல், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நார்ட் சிஇ 5-ஐப் போலவே தோற்றமளிக்கிறது. இது பர்கண்டி ரெட் மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரண்டு கலர் தேர்வுகளில் வழங்கப்படும். இந்த போனின் பின்புற பேனலில் ஒற்றைக் கேமரா இடம்பெறலாம்.
போனின் வடிவமைப்பின்படி, இந்த ஒன்பிளஸ் போனில் 3.5mm ஆடியோ ஜாக் இடம்பெறும். போனின் பின்புற பேனலில் LED ஃபிளாஷ் கொண்ட ஒற்றை கேமரா உள்ளது. பக்கவாட்டில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டனும் தென்படுகின்றன. பின்புற பேனலில் ஒன்பிளஸ் பிராண்டிங்கைக் காணலாம்
ஒன்பிளஸ் N6-இன் சிறப்பம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இந்த குறைந்த விலை போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை சப்போர்ட் செய்யும் 6.75-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஒன்பிளஸ் போன் 1200 நிட்ஸ் வரையிலான உச்சபட்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 6360Apex சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஃபோனில் 8000mAh பேட்டரி, 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50MP கேமரா ஆகியவை உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 8MP முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS -இல் இயங்குகிறது. இந்த ஃபோன் IP65 ரேட்டிங் பெற்றிருப்பதால், தன்னிற் மற்றும் டஸ்ட் பாதுகாப்பு கொண்டுள்ளது.
இதையும் படிங்க முதல் முறையாக விற்பனைக்கு வரும் Vivo T5 Lite 5G ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்
OnePlus N6x-இன் சிறப்பம்சங்கள் எதையும் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதன் பெரும்பாலான சிறப்பம்சங்கள் OnePlus N6-ஐப் போலவே இருக்கும். மேலும், இந்தத் தொலைபேசியின் விலை OnePlus N6-ஐ விடக் குறைவாக இருக்கும்; இது இந்தியாவில் ₹18,000 முதல் ₹20,000 வரையிலான விலை வரம்பில் அறிமுகப்படுத்தப்படலாம்.