Oneplus 7T Pro McLaren Edition அறிமுகம் இது சிறப்பு என்ன? வாங்க பாக்கலாம்.

HIGHLIGHTS

ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் பப்பாயா ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 58,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் நவம்பர் 5 ஆம் தேதி ஆரம்பமாகிறது.

Oneplus 7T Pro  McLaren Edition  அறிமுகம் இது சிறப்பு என்ன? வாங்க பாக்கலாம்.

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 7டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனிலும் 6.67 இன்ச் ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் விற்பனை தகவல் 
ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் பப்பாயா ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 58,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் நவம்பர் 5 ஆம் தேதி ஆரம்பமாகிறது.. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.

பப்பாயா ஆரஞ்சு நிற ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷனின் கீழ்புறம் பிளாக் நிறத்தில் நிறைவுறும் வகையில் இருக்கிறது. இத்துடன் மெக்லாரென் லோகோ அழகாக காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேக தீம்களும், கஸ்டம் வால்பேப்பர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹனிகொம்ப் வடிவமைப்பும் கொண்டிருக்கிறது.

Oneplus 7T Pro  McLaren Edition  சிறப்பம்சங்கள்:

– 6.67 இன்ச் 3120×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே
– 3D கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
– 675MHz அட்ரினோ 640 GPU
– 12 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 7P லென்ஸ், f/1.6, 0.8μm பிக்சல், OIS, EIS
– 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 1.0 μm பிக்சல், OIS, 3x சூம்
– 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு லென்ஸ், f/2.2, 2.5 செ.மீ. மேக்ரோ
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.0μm பிக்சல்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப்-சி
– டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4080 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ரேப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்

இவை தவிர ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புகைப்படங்களை எடுக்க ஒன்பிளஸ் 7டி மாடலில் உள்ளதை போன்று 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், OIS, 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்.பி. சோனி IMX471 சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo